இந்திய கிரிக்கெட் அணி பங்கேற்கும் தொடருக்கான அட்டவணை வெளியீடு.. சென்னையில் போட்டி இருக்கா?
இந்திய கிரிக்கெட் அணி நடப்பாண்டு இறுதியில் தங்களது சொந்த மண்ணில் நான்கு டெஸ்ட் போட்டி மற்றும் 3 ஒரு நாள் போட்டி ஐந்து டி20 போட்டி கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. இந்திய அணிக்கு இந்த ஆண்டின் பெரும்பான்மையான பகுதி வெளிநாட்டில் தான் சுற்றுப் பயணத்திற்கு மேற்கொண்டு விளையாடுகிறது.
தற்போது ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த தொடர் முடிவடைந்த உடன் இந்திய அணி வரும் ஜூன் 20ஆம் தேதி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இந்த தொடர் முடிவடைந்த உடன் வங்கதேசம் மற்றும் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடும் இந்திய அணி அதன் பின் செப்டம்பர் மாதம் ஆசிய கோப்பை போட்டியில் விளையாடுகிறது. இந்த தொடர் முடிவடைந்த உடன் வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.
இதில் முதல் டெஸ்ட் போட்டி வரும் அக்டோபர் இரண்டாம் தேதி வியாழன் கிழமை அஹமதாபாத்தில் தொடங்குகிறது. இதனை தொடர்ந்து அக்டோபர் 10ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரண்டாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் நடைபெறுகிறது. இந்த தொடர் முடிவடைந்த உடன் இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒரு நாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
அந்தத் தொடர் முடிவடைந்த பிறகு நேராக இந்திய அணி தங்களது சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி வரும் நவம்பர் 14ஆம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. இதனை அடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டி கவுஹாத்தியில் நவம்பர் 22ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தொடர் முடிவடைந்த உடன் ஒருநாள் போட்டி தொடங்குகிறது.
இதில் நவம்பர் 30ஆம் தேதி முதல் ஒருநாள் போட்டி ராஞ்சியிலும், டிசம்பர் மூன்றாம் தேதி இரண்டாவது ஒருநாள் போட்டி ராய்ப்பூரிலும், டிசம்பர் 6ஆம் தேதி மூன்றாவது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்திலும் நடைபெறும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்தத் தொடர் முடிவடைந்த உடன் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறுகிறது.
இதில் டிசம்பர் 9ஆம் தேதி இந்திய அணி முதல் டி20 போட்டியில் கட்டாக்கில் விளையாடுகிறது. டிசம்பர் 11ஆம் தேதி இரண்டாவது டி20 போட்டி சந்திகாரிலும், டிசம்பர் 14ஆம் தேதி மூன்றாவது டி20 போட்டி தர்மசாலாவிலும், டிசம்பர் 17ஆம் தேதி நான்காவது டி20 போட்டி லக்னோவிலும், டிசம்பர் 19ஆம் தேதி ஐந்தாவது டி20 போட்டி அகமதாபாத்திலும் நடைபெறுகிறது.