இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இதுவே முதல்முறை- பாகிஸ்தான் போட்டியில் சாதனை..!
ஐக்கிய அரபு அமீரகத்தில் இடம்பெற்று வருகின்ற 15ஆவது ஆசிய கிண்ண போட்டி தொடரில் நேற்று இந்திய, பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இறுதி வரைக்கும் பரபரப்புக்கும் பஞ்சம் இல்லாத இந்த இரு தரப்பு ஆட்டத்திலே இறுதியில் போராட்டத்திற்கு மத்தியில் இந்தியா 5 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் இந்திய கிரிக்கெட் அகராதியில் ஒரு புதிய சாதனை ஒன்று நிலைநாட்டப்பட்டுள்ளது.
இந்தியாவின் கிரிக்கெட் போட்டிகளில் வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமே அனைத்து விக்கெட்டுகளையும் கைப்பற்றிய முதல் சந்தர்ப்பமாக நேற்றைய போட்டி பதிவானது.
புவனேஷ்வர் குமார் 4 விக்கெட்களையும், ஹார்டிக் பாண்டியா 3 விக்கெட்களையும், அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளையும், அவேஸ் கான் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
மொத்தமாக வேகப்பந்து வீச்சாளர்களே தமக்குடையில் 10 விக்கெட்டுகளையும் பகிர்ந்தனர், இவ்வாறு வேகப் பந்துவீச்சாளர்களே அனைத்து விக்கெட்டுகளையும் T20 கைப்பற்றிய முதல் சந்தர்பமாக நேற்றைய போட்டி பதிவானது.
முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 147 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது, இந்தியா இரண்டு பந்துகள் மீதமிருக்க 5 விக்கெட்டுகளால் நேற்றைய போட்டியை வென்றது.