இந்திய தொடரை கைவிட்டு ஒதுங்கிக் கொள்ளும் பென் ஸ்டோக்ஸ் _திடீர் முடிவு ஏன் ?

இந்திய தொடரை கைவிட்டு ஒதுங்கிக் கொள்ளும் பென் ஸ்டோக்ஸ் _திடீர் முடிவு ஏன் ?

இந்திய ,இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் மாதம் 4ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இதற்கு முன்னதாக இங்கிலாந்து அணியின் நட்சத்திர சகலதுறை ஆட்டக்காரர் பென் ஸ்டோக்ஸ் திடீர் முடிவு ஒன்றை அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

அவருடைய இடது ஆட்காட்டி விரலில் IPL போட்டிகளின்போது உபாதை ஏற்பட்டது, இதன் பின்னர் சத்திர சிகிச்சை மேற்கொண்டு ஸடோக்ஸ் ஓய்வில் இருந்தார்.

பின்னர் அண்மையில் பாகிஸ்தான் அணிக்கெதிரான தொடரில் இங்கிலாந்தின் தலைவராக ஸ்டோக்ஸ் விளையாடி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

அவருடைய ஆட்காட்டி விரலின் உபாதை காரணமாக ஆலோசித்து தான் உறுதியாக ஓய்வில் இருக்க முடிவெடுத்ததாக பென் ஸ்டோக்ஸ் குறிப்பிட்டுள்ளமை கவனிக்கத்தக்கது.

இதன் காரணத்தால்  பென் ஸ்டோக்ஸ்க்கு பதிலாக கிரேக் ஓவர்டோன்  டெஸ்ட்  அணிக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் ECB இங்கிலாந்துக் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

பென் ஸ்டோக்ஸ் அணியில் இல்லாமை இங்கிலாந்்து அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும் என்று நம்பப்படுகிறது..