இந்திய, பாகிஸ்தான் போட்டிக்கு வாயப்பில்லை, கோரிக்கையை நிராகரித்த ஜசிசி…!

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான நாற்கரத் தொடருக்கான ரமீஸ் ராஜாவின் கோரிக்கை ஐசிசி வாரியக் கூட்டத்தில் ஏகமனதாக நிராகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் ஐசிசி நடத்துகின்ற போட்டி தொடர்களை விட ,வேறுவிதவிதமான இருநாட்டு தொடர்கள் இடம்பெறுவதில்லை .

இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் காரணமே, பிரச்சினையை இதற்கான முக்கியமான விடயமாக பார்க்கப்படுகின்றது.

இந்த நிலையில் இரு நாடுகளையும் ஐசிசி தொடர் தவிர்ந்த தொடர்களில் விளையாடுவதற்காக முயற்சிகளை பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவர் ரமீஷ் ராஜா மேற்கொண்டார்.

அதன் அடிப்படையில்தான் இந்திய ,பாகிஸ்தான் ,இங்கிலாந்து ,அவுஸ்ரேலிய அணிகளுக்கிடையிலான நான்முனை தொடருக்கான ஒரு அனுமதியை ஐசிசி இடம் கோரினார்.

டுபாயில் இடம்பெறும் ICC யின் காலாண்டு குழுக் கூட்டத்தில் இந்தவிடயம் நிராகரிக்கப்பட்டதாக அறியவருகிறது.