இந்திய – பாகிஸ்தான் போட்டியை தவறவிடும் இந்திய வேகப்பந்து வீச்சாளர் …!

இந்தியா அணியின் முக்கிய வீரர் ரவீந்திர ஜடேஜா காயம் காரணமாக ஆசிய கோப்பையின் எஞ்சிய போட்டிகளில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இதேநேரத்தில் வேகப்பந்து வீச்சாளர் அவேஷ் கான்  பாகிஸ்தானுக்கு எதிரான நாளைய முக்கிய போட்டியில் விளையாட வாய்ப்பில்லை என இந்திய முகாமில் இருந்து மற்றொரு மோசமான செய்தி வந்துள்ளது.

அறிக்கைகளின்படி, 25 வயதான அவர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார், மேலும் அவர் கிட்டத்தட்ட இரண்டு நாட்களாக தனது ஹோட்டல் அறையை விட்டு வெளியேறவில்லை என தெரியவருகின்றது.

சனிக்கிழமையன்று செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், அவேஷ் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால் மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் இருப்பதை உறுதிப்படுத்தினார்.

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இரண்டு ஓவர்கள் வீசி 19 ரன்கள் விட்டுக்கொடுத்து ஃபகார் ஜமானின் விக்கெட்டை வீழ்த்தினார்.

ஹாங்காங்கிற்கு எதிரான இந்தியாவின் இரண்டாவது ஆட்டத்தில் அவேஷ் கான் தனது 4 ஓவர்களில் 53 ரன்கள் கொடுத்ததால் மிகவும் விமர்சிக்கப்பட்டார்.

 

ஒட்டுமொத்தமாக, அவேஷ் கான் இந்தியாவுக்காக 15 டி20 போட்டிகளில் விளையாடி 32.46 சராசரியிலும், 9.10 எகனமியில், 21.3 ஸ்ட்ரைக் ரேட்டிலும் 13 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

ஹொங்கொங் அணியுடனான போட்டியில் அவேஷ் கான் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகிய இருவரும் இணைந்து தங்களுக்கான 8 ஓவர்களில் மொத்தம் 97 ஓட்டங்களை வாரி வழங்கியதால் விமர்சனத்தை சந்தித்திருந்தனர் .

 

இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு எதிராக நாளைய நாளில் விளையாட மாட்டார் என்பது ஒரு வகையில் இந்தியர்களுக்கு நல்ல செய்தியாக இருந்தாலும், மாற்று வீரராக யார் வரப்போகிறார்கள் என்பது கேள்விக்குரியதாகவே காணப்படுகிறது.

பாகிஸ்தான் இளம் வேகப்பந்து வீச்சாளர் தஹானியும் நாளைய போட்டியில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.