இந்திய வீரர்களிடம் நட்புணர்வுடன் பழக கூடாது.. பாகிஸ்தான் வீரர்களுக்கு மோயின் கான் வார்னிங்

இந்திய வீரர்களிடம் நட்புணர்வுடன் பழக கூடாது.. பாகிஸ்தான் வீரர்களுக்கு மோயின் கான் வார்னிங்

இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுடன் களத்தில் நட்புணர்வுடன் நடந்து கொள்ளக் கூடாது என பாகிஸ்தான் வீரர்களுக்கு அந்நாட்டு முன்னாள் கிரிக்கெட் வீரர் மோயின் கான் அறிவுரை வழங்கியிருக்கிறார். வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்தியாவும், பாகிஸ்தானும் பிப்ரவரி 23ஆம் தேதி துபாயில் உள்ள மைதானத்தில் பலப்பரீட்சை நடத்துகிறது.

இந்த போட்டி குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் மோயின் கான், “பாகிஸ்தான் வீரர்களின் செயல் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாத அளவுக்கு இருப்பதாக கூறி இருக்கிறார். இது குறித்து பேசிய அவர், தற்போது எல்லாம் இந்தியா பாகிஸ்தான் விளையாடும் போட்டிகளை பார்த்தால் எனக்கு ஒன்றுமே புரியவில்லை”.

“இந்திய வீரர்கள் களத்திற்கு வந்தவுடன் பாகிஸ்தான் வீரர்கள் ஓடிப்போய் அவருடைய பேட்டை வாங்கி செக் செய்கிறார்கள் மற்றும் அவர்களுடன் நட்புகளுடன் நடந்து கொள்கிறார்கள். களத்திற்கு வெளியேவும் ஒரு தொழில் முறை கிரிக்கெட் ஆக உங்களுக்குள் ஒரு எல்லை நிச்சயம் இருக்க வேண்டும். நாங்கள் விளையாடும் காலத்தில் இந்திய வீரர்களுடன் நட்புணர்வுடன் இருக்க மாட்டோம்”.

“எங்களுடைய சீனியர்கள் இதையெல்லாம் அனுமதிக்கவே மாட்டார்கள். நாங்கள் இந்திய வீரர்களுடன் விளையாடும்போது களத்தில் பேசவே மாட்டோம். நீங்கள் எப்போது நட்புணர்வுடன் நடந்து கொள்கிறீர்களோ அது உங்களுடைய பலவீனத்தின் அறிகுறையாக இந்திய வீரர்கள் பார்ப்பார்கள். இதை நமது வீரர்கள் புரிந்து கொள்ளவே மாட்டார்கள்”.

“நீங்கள் நட்புணர்வுடன் நடந்து கொள்ளும் போது உங்களுக்கு போராட்டம் குணம் குறைவாகிவிடும். இதன் மூலம் நீங்கள் படும் அழுத்தத்தை சந்திக்க நேரிடும்” என்று பாகிஸ்தான் வீரர் கூறியிருக்கிறார். வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் நியூசிலாந்து ஆகிய அணிகள் அனைத்தும் குரூப் ஏவில் இருக்கிறது. இதில் முதல் இரண்டு இடங்கள் குறிக்கும் அணிதான் அரையிறுதி சுற்றுக்கு செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleசாம்பியன்ஸ் டிராபி- பாகிஸ்தான் அணி அறிவிப்பு.. பாபர் அசாம்-க்கு புதிய பொறுப்பு.. அதிரடி வீரர் இல்லை
Next articleசொந்த மண்ணில் தொடர்ச்சியாக அதிக T20I தொடர்களில் வெற்றிபெற்ற அணிகள்.