IPL போட்டிகளில் பங்கேற்றுவரும் வீரர்கள் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய மக்களுக்காக தமது பிரார்த்தனைகளை முன்வைப்பதோடு பண உதவியும் வழங்கி வருகின்றனர்.
கொல்கொத்தா அணிக்காக IPL போட்டிகளில் விளையாடிவரும் அவுஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸ் 50 ஆயிரம் அமெரிக்க டொலர்களை அன்பளிப்பாக வழங்கினார்.
IPL போட்டிகளின் வர்ணனையாளராக கடமையாற்றும் முன்னாள் அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரான பிரெட் லீ இன்றைய நாளில் ஒரு பிட் கொயினை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.
பேட் கம்மின்ஸ் வழங்கிய நிதி உதவி இந்திய அமதிப்பில் 37 லட்சமாகவும், பிரட் லீயின் உதவு தொகை இந்திய மதிப்பில் அண்ணளவாக 42 லட்சம் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா தோற்றாளர்களுக்கு வெளிநாட்டு வீரர்கள் உதவித்தொகை வழங்கி வரும் நிலையில், IPL அணிகளின் உரிமையாளர்களோ அல்லது இந்திய வீரர்களோ தமது உதவித்தொகை தொடர்பில் எதுவும் இப்போது அறிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆயினும் முதலாவது அலையின் போது பலர் உதவி வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
எதுஎவ்வாறாயினும் அவுஸ்திரேலிய வீரர்கள் இந்திய வீரர்களுக்கு ஏதோவொரு வகையில் முன்னுதாரணமாகவே செயல்படுகின்றமை பாராட்டத்தக்கதே.