இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த பந்துவீச்சுகளுள் ஒன்று என வர்ணிக்கப்படும் அற்புத சுழல் ஜாலம் பர்கின்சன் சாதனை ..!

இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த பந்துவீச்சுகளுள் ஒன்று என வர்ணிக்கப்படும் அற்புத சுழல் ஜாலம் பர்கின்சன் சாதனை ..!

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின புதுமுக வீரராக அடையாளப்படுத்தப்படும் பர்கின்சன் எனப்படும் லெக் ஸ்பின் பந்து வீச்சாளர் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டார்.

இங்கிலாந்தில் இடம்பெறும் The Hundred என்று சொல்லப்படுகின்ற 100 பந்துகள் கொண்ட கிரிக்கெட் தொடரின் முக்கியமான ஒரு ஆட்டத்தில் இங்கிலாந்து வீரர் பர்கின்சன் விக்கெட்டை கைப்பற்றிய விதம் எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்தது.

அதிகமாக வோர்ன் போன்ற வீரர்களிடம் இந்த மாதிரியான சிறந்த பந்து வீச்சை இதற்கு முன்னர் கண்டிருப்போம் ,அதையும் தாண்டிய ஒரு மிகச்சிறந்த ஒரு பந்து வீீச்சாக இந்த பந்து நோக்கப்படுவதோடு, இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த பந்துவீச்சு சாதனைக்கான பட்டியலில் இந்த பந்தும் இடம்பிடிக்கும் என ரசிகர்கள் நம்பிக்கையில் இருக்கின்றனர்.

வீடியோ இணைப்பு.