இந்த 4 பேரை துரத்தி விட்டால், எல்லாம் சரி ஆயிடும். சொந்த நாட்டு வீரரை காப்பாற்றும் பிளமிங்
ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கிட்டத்தட்ட கிளைமாக்ஸ் நோக்கி செல்கிறது என்று சொல்லலாம். இந்தத் தொடர் பாதி கட்டத்தைக் கூட நெருங்காத நிலையில் சிஎஸ்கே அணியின் கதை முடிய போகிறது. விளையாடிய 6 போட்டிகளில் சிஎஸ்கே அணி 5 போட்டிகளில் தோல்வியை தழுவி விட்டது.
இன்னும் சிஎஸ்கே அணிக்கு எட்டு போட்டிகள் தான் எஞ்சி இருக்கிறது. இதில் சிஎஸ்கே 7 போட்டிகளில் வெற்றி பெற வேண்டும். இது முடியாத காரியம் என்பதால் சிஎஸ்கே அணிக்கு கதம் கதம் தான். சிஎஸ்கே அணியில் பல பிரச்சனைகள் இருக்கின்றது. இந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் முக்கிய காரணமாக பிளமிங்கும் ருதுராஜூம் தான் இருக்கிறார்கள்.
குறிப்பாக பிளமிங் பயிற்சியாளராக இருக்கும்போது அவர் மீது பெரிய குற்றச்சாட்டு ஒன்று வைக்கப்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன்பு அஸ்வின் தன்னுடைய யூடியூப் சேனலில் பெயரை குறிப்பிடாமல் ஒரு புகாரை சொன்னார். ஒரு அணியில் ஒரு பயிற்சியாளர் தொடர்ந்து தங்களது நாட்டு வீரர்களை மட்டும் தேடித்தேடி ஏலத்தில் வாங்குவதாகவும் மேலும் அவர்கள் சரியாக விளையாடவில்லை என்றாலும் தொடர்ந்து அணியில் வைப்பதாகவும் இதனால் அந்த அணி தோற்பதாகவும் கூறியிருந்தார்.
அவர் பிளமிங்கைதான் மறைமுகமாக குற்றம் சாட்டினார் என்று அப்போதே ரசிகர்கள் கூறினர். ஏனென்றால் கான்வே, ரச்சின் ரவீந்தரா, டாரல் மிட்செல் என்று சிஎஸ்கே அணியில் நான்கு நியூசிலாந்து வீரர்கள் அப்போது இருந்தார்கள். தற்போது கூட ரவிந்தரா அணியில் இருக்கிறார். ஆனால் அவர் தொடர்ந்து சரியாக விளையாடவில்லை. இதுவரை அவர் இரண்டு சீசன்களில் வெறும் இரண்டு ஆட்டங்களில் மட்டும் தான் அதிரடி காட்டி இருக்கிறார்.
அப்படி இருக்கும்போது ரச்சின் ரவீந்தரா டி20 போட்டிகளுக்கு சரிப்பட்டு வர மாட்டார் என்று அவரை நீக்கிருக்க வேண்டும். ஆனால் தொடர்ந்து சிஎஸ்கே அணி அவருக்கு வாய்ப்பு வழங்கி வருகிறது. இதற்கு காரணம் பிளமிங் உடைய செயல் தான் என்று குற்றச்சாட்டில் இருந்துள்ளது. ரச்சின் நல்ல ஒரு ஆல் ரவுண்டராக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நடப்பு சீசனில் அவர் ஒரு முறை கூட பந்து வீசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி பேட்டிங் இருக்கும் பிரயோஜனம் இல்லாத ஒரு வீரரை எதற்காக அணியில் வைத்திருக்கிறார்கள் என்று கேள்வி எழுந்துள்ளது. இதேபோன்று சிஎஸ்கே அணையில் இருந்து அதிரடியாக நீக்கப்பட வேண்டிய வீரர் என்றால் அது ராகுல் திருப்பாதி தான். ராகுல் திருப்பாதி வயது ஆகிவிட்டது. அவர் பார்மிலும் இல்லை என்பதால் தான் இந்திய அணியில் இருந்து துரத்தி விடப்பட்டார். அதன் பிறகு நடைபெற்ற எந்த ஒரு உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளிலும் அவர் பெரியதாக ரன் குவிக்கவில்லை.
அப்படி இருக்கும்போது எப்படி ஏலத்தில் ராகுல் திருப்பாதியை ஏன் வாங்கினார்கள் என்பது புரியாத புதிராக இருக்கிறது. ராகுல் திருப்பாதி தொடர்ந்து மோசமாக விளையாடி வருகிறார். பந்தை பார்த்து ரன் அடி என்றால் வந்து வருவதற்கு முன்பே டான்ஸ் ஆடுகிறார். களத்தில் கொஞ்சம் கூட அவருக்கு நம்பிக்கையே இல்லை. தன் மீது நம்பிக்கை இல்லாத ஒருவரை அழைத்து வந்து சிஎஸ்கே அணி அதுவும் சேப்பாக்கம் ஆடுகளத்தில் விளையாடு என்று கூறுகிறது. ராகுல் திருப்பாதியை நம்பி சிஎஸ்கே அணி ஏமாந்து விட்டது என்பதுதான் உண்மை.
இந்த தருணத்தில் ராகுல் திருப்பாதிக்கு அடிப்பட்டு விட்டது என்று சொல்லி அவரை அணியை விட்டு துரத்திவிட்டு வேறு புதிய வீரர்களை வாங்கினால் கூட சிஎஸ்கே அணி வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது. இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருப்பவர் தீபக் ஹூடா. தீபக் ஹூடா சிஎஸ்கே அணிக்கு வந்தபோது ஒரு நல்ல ஆல் ரவுண்டராக திகழ்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ராபின் உத்தப்பா, ரகானே போன்ற வீரர்களுக்கு எப்படி சிஎஸ்கே மறுவாழ்வு கொடுத்ததோ அதேபோல் தீபக் ஹூடாவிற்கும் மறுவாழ்வை சிஎஸ்கே கொடுக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் கோபுரத்தில் இருந்த சிஎஸ்கே அணியை நடுத்தெருவுக்கு இழுத்து வந்துவிட்டார் தீபக் ஹூடா. தீபக் ஹூடாவுக்கு பேட்டிங் சுத்தமாக வரவில்லை. இன்று கூட வேறு வழி இன்றி தீபக் ஹூடாவை இம்பாக்ட் வீரராக சிஎஸ்கே அணி களம் இறக்கியது. ஆனால் அவர் சிஎஸ்கேவுக்கு இம்பேக்ட் கொடுக்காமல் எதிரணிக்கு இம்பேக்ட் கொடுத்துவிட்டார். வெறும் நான்கு பந்துகளை எதிர்கொண்டு டக்அவுட் ஆகி வெளியேறினார். இதனால் சிஎஸ்கே அணி பதிரானாவுக்கு வாய்ப்பு தர முடியாமல் போய்விட்டது.
இதன் காரணமாக தீபக் ஹூடாவையும் அணியை விட்டு வெளியே துரத்தினால் மட்டுமே சிஎஸ்கே அணி உருப்பிடும். இதேபோன்று பிளமிங்கும் தற்போது அவுடேட் ஆகிவிட்டார். 15 ஆண்டுகளுக்கு மேல் அவர் பயிற்சியாளராக இருக்கிறார். இதனால் காலம் தற்போது மாறி வருவதை உணர்ந்து சிஎஸ்கே அணியும் புதிய பயிற்சியாளரை நியமிக்க வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தி தொடங்க விட்டார்கள்.
இந்த சூழலில் சிஎஸ்கே அணி முழுக்க முழுக்க இளம் வீரர்களை நம்பி இனி பரிசோதனை முயற்சியில் ஈடுபட வேண்டும். இந்த சீசன் போய்விட்டது அடுத்த சீசன் ஆவது தப்பிக்க வேண்டும் என்றால் சிஎஸ்கே அணி பல அதிரடி மாற்றங்களை எடுக்க வேண்டும். எப்படி சிஎஸ்கே அணி 2020 ஆம் ஆண்டு படுதோல்வியை தழுவிய நிலையில் கடைசி மூன்று போட்டிகளில் ருதுராஜ்க்கு வாய்ப்பு வழங்கியது. அதனை அவர் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டு ஹாட்ரிக் அரை சதம் அடித்தார். இதன் பிறகு சிஎஸ்கே அணியின் மிகவும் முக்கியமான வீரராக திகழ்ந்தார்.
அதேபோல் தற்போது சிஎஸ்கே அணி இந்த எக்ஸ்ட்ரா லக்கேஜ் எல்லாம் தூக்கி எறிந்து விட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். சிஎஸ்கே அணியில் இருக்கும் சாய் ரசித், வன்ஸ் பேடி, போன்ற வீரர்களுக்கு பிளேயிங் லெவனின் இடம் கொடுக்க வேண்டும். இந்த சீனியர் வீரர்கள் இதற்கு மேல் விளையாடி, எந்த பயனும் இல்லை. இதனால் ஜூனியர் வீரர்களுக்காவது இருக்கும் சில போட்டிகளை விளையாட வைத்து அவர்களுக்கு நம்பிக்கையை கொடுக்க வேண்டும்.
இன்று அன்சூல் காம்போஜ்க்கு முதல் வாய்ப்பு வழங்கப்பட்டது. அதனை அவர் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார். இதேபோன்று மற்ற இரண்டு இளம் வீரர்களையும் சிஎஸ்கே அணி பிளேயிங் லெவனில் சேர்க்க வேண்டும். இதைப் போன்று ரவீந்திராவுக்கு பதில் இங்கிலாந்து வீரர் ஜெமி ஓவர்டன் அல்லது ஆஸ்திரேலியா வீரர் நாதன் எல்லிசையாவது சிஎஸ்கே அணி பயன்படுத்த வேண்டும். எப்படி கொல்கத்தா அணி யாருமே யோசிக்காத வகையில் சுனில் நரேனை தொடக்க வீரராக களமிறக்கி அசத்தியதோ அதேபோல் சிஎஸ்கே அணியும் தொடக்க வீரர்களாக யாரும் எதிர்பாராத வீரர் ஒருவரை களம் இறக்கி பரிசோதனை செய்ய வேண்டும்.
இதையெல்லாம் செய்தால் மட்டுமே சிஎஸ்கே அணி வெற்றி பெற முடியும். நீங்கள் இது செய்யாமல் இருந்தாலும் பரவாயில்லை தயவு செய்து ரச்சின் ரவீந்திரா, ராகுல் திருப்பாதி, தீபக் ஹூடா இந்த மூன்று வீரர்களை துரத்திவிட்டு காயமடைந்த ருதுராஜ்க்கு பதில் வேற ஏதேனும் புதிய வீரரை அணிக்குள் கொண்டு வாருங்கள் என்று சிஎஸ்கே ரசிகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.