இன்ஸ்ட்ராகிராமில் ஒரு பதிவுக்கே கோடிகளை அள்ளியெடுக்கும் ரொனால்டோ, கோஹ்லி- என்னப்பா இவ்வளவு சம்பாத்தியமா ..?

இன்ஸ்ட்ராகிராமில் ஒரு பதிவுக்கே கோடிகளை அள்ளியெடுக்கும் ரொனால்டோ, கோஹ்லி- என்னப்பா இவ்வளவு சம்பாத்தியமா ..?

இன்று பணம் சம்பாதிக்கும் வாய்ப்புகள் இண்டர்நெட்டில் ஏக்கசக்கமாக உள்ளது, இதில் முக்கியமானவை பிளாகிங், யூடியூப் போன்றவை. தற்போது இப்பட்டியலில் இன்ஸ்டாகிராம், ஷட்டர்ஸ்டாக் உள்ளிட்ட இணையதளங்களின் உதவியுடனும் வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்க முடியும் சிறந்த வாய்ப்பாக உள்ளது.

இதன் மூலம் சாமானியர்கள் பணம் சம்பாதிப்பது சற்று கடினமாக இருந்தாலும் பிரபலமாக இருந்தால் ஆரம்பத்திலேயே பல லட்சங்களையும், சில வருடங்களில் கோடிகளையும் சம்பாதித்து விடலாம்.

இப்படி பிரபலங்கள் பல கோடி ரூபாயை இன்ஸ்டாகிராம் வழியாகம் சம்பாதிக்கின்றார்கள்.

அந்தவகையில், இன்ஸ்டாவில் தற்போதைய நிலையில் ஒரு பதிவுக்கு மிக அதிக பணம் கிடைப்பவராக முன்னிலையில் உள்ளவர் உதைபந்தாட்ட நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ.

தனது இன்ஸ்டாவில் பகிரும் ஒரு பதிவினால் ரொனால்டாவுக்கு கிடைக்கும் பணம் 111.9 கோடி இந்திய ரூபாய்கள் என்று பிரபல சமூக வலைத்தள வருமான மதீப்பீட்டு இணையம் தெரிவித்துள்ளது. ரொனால்டோவை இன்ஸ்டாவில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 30 கோடி 80 லட்சம் பேர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த லிஸ்ட்டில் இருக்கும் கிரிக்கெட் நட்சத்திரம் கோஹ்லி ஒரு பதிவின் மூலமாக 5 கோடி இந்திய ரூபாய்களை சம்பாதிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. ரொனால்டோ, மெஸ்ஸி ,நெய்மார் ஆகியோரை தொடர்ந்து அதிகம் சம்பாதிப்பவர் கோஹ்லி என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரொனால்டோ 11.9 கோடி இந்திய ரூபாய்கள்
மெஸ்ஸி 8.6 கோடி இந்திய ரூபாய்கள்
நெய்மார் 6.1 கோடி இந்திய ரூபாய்கள்
கோஹ்லி 5 கோடி இந்திய ரூபாய்கள் இன்ஸ்ட்ராகிராம் மூலமாக கோடிகளை சம்பாதித்துக் கொண்டிருக்கின்றமை கவனிக்கத்தக்கது.