இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் ரோஷன் மஹாநாமாவை நியமிக்க வேண்டும் என்று இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் பரிந்துரைத்துள்ளார்.
தற்போதைய முறையை யாரால் மாற்ற முடியும் என்று நாம் யோசித்தால் ஒரே மனிதர் மஹாநாமதான். முக்கியமாக அவரது ஒழுக்கத்தின் காரணமாக அணியை அவரால் மாற்றியமைக்க முடியும் என்பது முரளியின் கருத்தாகும்.
“நான் விளையாட்டுத்துறை அமைச்சரிடமும் பேசினேன், ரோஷன் மஹாநாமா இதைப் பற்றி சிந்திக்க நேரம் வேண்டும் என்று தெரிவித்தார், ஆனால் இது எனது கருத்து, ஸ்ரீலங்கா கிரிக்கெட் இதைப் பற்றி என்ன நினைக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை என இலங்கையின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரரும் தற்போதைய இலங்கை கிரிக்கெட் ஆலோசனைக் குழுவின் உறுப்பினருமான முரளிதரன் கருத்து தெரிவித்தார்.
இலங்கை கிரிக்கெட் ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக உள்ள மஹாநாம, தற்போதைய இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆர்தருக்கு மாற்றாக கருதப்படுகிறார், அவரது இரண்டு ஆண்டு பதவிக்காலம் டிசம்பரில் முடிவடையும் என்று சண்டே டைம்ஸ் செய்தித்தாள் ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.
மஹாநாமவுக்கு பயிற்சி விடயங்களில் சில நற்சான்றிதழ்கள் இருந்தாலும், அவர் ஒரு நல்ல மனித மேலாளராக கருதப்படுகிறார்.
இலங்கை அணிக்கு மஹாநாம பயிற்சியாளராக நியமிக்கப்பட்டால் தற்போதைய இந்திய தலைமை பயிற்சியாளர் ரவி சாஷ்த்திரிக்கு ஒத்த பாத்திரத்தை அவராலும் வகிக்க முடியும் என கிரிக்கெட் ஆர்வலர்கள் கருத்து வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.