இலங்கைக்கு எதிரான ஒரே போட்டியில் இவ்வளவு சாதனைகள் படைத்ததா இந்திய அணி…!

இலங்கைக்கு எதிரான ஒரே போட்டியில் இவ்வளவு சாதனைகள் படைத்ததா இந்திய அணி…!

இலங்கை கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் இந்திய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டியில் பிரேமதாச மைதானத்தில் நேற்று நிறைவுக்கு வந்தது .

இந்தியாவின் தேசிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணத்தில் இருக்கும் நிலையில் இப்போது இலங்கையில் தவான் தலைமையிலான இரண்டாம்தர அணி இலங்கை தொடரில் பங்கேற்று வருகிறது .

இந்த போட்டியில் 80 பந்துகள் மீதமிருக்க 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இந்திய அணி ஏராளம் சாதனைகள் படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

80 – இந்த போட்டியில் 80 பந்துகள் மீதமிருக்க இந்தியா வெற்றி பெற்றது. 250+ ரன்-சேஸில் இதுவே இந்தியாவின் சாதனையாகும்..

1 – ஒருநாள் மற்றும் T20 போட்டிகளில் அரைசதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை இஷான் கிஷன் பெற்றார். முதல் ஒருநாள் போட்டியில் 59 ரன்கள் எடுத்தார், இந்த ஆண்டு தொடக்கத்தில் இங்கிலாந்துக்கு எதிரான T20 யில் அறிமுகி அரைசதத்தை பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

2 – இஷான் கிஷன் 33 பந்துகளில் தனது அரைசதத்தை எட்டினார், இது ஒருநாள் போட்டிகளில் அறிமுக வீரரின் இரண்டாவது வேகமான அரைச்சதமாகும்.இந்த ஆண்டு தொடக்கத்தில் இங்கிலாந்துக்கு எதிராக வெறும் 26 பந்துகளில் 50 ரன்கள் எட்டிய நிலையில் குருனல் பாண்ட்யா முதலிடத்தில் உள்ளார்.

2 – ஷிகர் தவான் தனது கேப்டன் பதவியில் அரைசதத்தை பெற்றுக்கொண்ட ஐந்தாவது இந்தியரானார். அவர் ஆட்டமிழக்காமல் 86 ரன்கள் எடுத்தார், இந்தப்பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் 110 ரன்கள் பெற்று முதலிடம் வகிக்கின்றார்.

6000 – முதல் ஒருநாள் போட்டியில் ஷிகர் தவான் ஒருநாள் கிரிக்கெட்டில் 6000 ரன்கள் சாதனையை பெற்றார். 140 வது இன்னிங்சில் அவர் இந்த மைல்கல்லை எட்டினார், ஹஷிம் அம்லா (123 இன்னிங்ஸ் ), விராட் கோஹ்லி (136 இன்னிங்ஸ்), கேன் வில்லியம்சன் (139 இன்னிங்ஸ்) ஆகியோருக்கு அடுத்து நான்காவது வேகமான வீரராக தவான் சாதனை படைத்தார் .

10,000 – நேற்றைய முதல் ஒருநாள் போட்டியில் தவான் சர்வதேச கிரிக்கெட்டில் மொத்தமாக 10000 ரன்களை எட்டினார் , அவ்வாறு சாதனையா செய்த ஐந்தாவது இந்திய ஆரம்ப வீரர் எனும் பெருமை தவானுக்கு கிடைத்தது.

1000 _ இலங்கை அணிக்கு எதிராக வெறுமனே 17 இன்னிங்ஸ்களில் 1000 ஓட்டங்கள் பெற்று தவான் சாதனை செய்தார், முன்னைய சாதனை அம்லா (18 இன்னிங்ஸ்) வசம் இருந்தது.