இலங்கையின் இரு வீரர்கள் ஐபிஎல் போட்டிகளுக்கு ஒப்பந்தமாகினர்..!

இலங்கையின் இரு வீரர்கள் ஐபிஎல் போட்டிகளுக்கு ஒப்பந்தமாகினர்..!

இலங்கை ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்குரிய ஒரு சம்பவம் தற்சமயம் நடைபெற்றிருக்கிறது.

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் நீண்டகாலமாக ஐபிஎல் போட்டிகளில் இணைத்துக் கொள்ளப்படாத நிலமை காணப்பட்டது, இந்த நிலையில் ஐ பி எல் தொடரின் இரண்டாம் கட்ட போட்டிகளுக்காக இலங்கையின் இளம் வீரர்களான வணிந்து ஹசரங்க மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோர் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

20- 20 போட்டிகளில்  மிகச்சிறப்பான ஆற்றலை வெளிப்படுத்தி வரும் துஷ்மந்த சமீர மற்றும் ஹசரங்க இப்போது கோலி தலைமையிலான  ஆர்சிபி அணியில் இணைக்கப்பட்டுள்ளமை இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

 இறுதியாக ஆர்சிபி அணியில் இலங்கையின் இசுரு உதான விளையாடி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையிலிருந்து ஐபிஎல் ஆடும் இருவரையும் வாழ்த்துவோம்.