இலங்கையின் பொருளாதார நெருக்கடி- உதவிக்கரம் நீட்டிய ஆஸி வீரர்கள்..!

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உலக நாடுகள் இலங்கைக்கு ஆதரவளிக்க வேண்டும் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் மிட்செல் ஸ்டார்க் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

சுற்றுலா உலக சாம்பியனான ஆஸ்திரேலிய அணி தற்போது டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளை உள்ளடக்கிய ஒரு மாத கால போட்டிக்காக இலங்கை வந்துள்ளது.

தற்போது கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கைக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குமாறு சுற்றுலா ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் இன்று இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகளின் குழு மற்றும் மனிதாபிமான தேவைகள் மற்றும் முன்னுரிமைகளுக்கான கூட்டுத் திட்டத்தைத் தொடங்கியுள்ள அரச சார்பற்ற நிறுவனங்களுடன் கைகோர்க்கின்றனர்.

ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான அடுத்த நான்கு மாதங்களில் இலங்கைக்கு அத்தியாவசிய உதவிகளை வழங்குவதற்காக மனிதாபிமான உதவியாக 47.2 மில்லியன் அமெரிக்க டொலர்களை திரட்டுவதை இந்த வேலைத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களான ஸ்டீவ் ஸ்மித் மற்றும் மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் இலங்கையின் பொருளாதார நெருக்கடி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் காணொளிச் செய்தி ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.

இலங்கைக்கு உதவ விரும்புவோர் கீழே உள்ள இணைப்பின் மூலம் நன்கொடை அளிக்கலாம்.

https://srilanka.embassy.gov.au/clmb/ResponseSupportforSriLankaEconomicCrisis.html

Smith, strac விடுத்த கோரிக்கையை இங்கே பாருங்கள் ?

 

இந்தியாவின் உலகசாதனை கனவை தவிடுபொடியாக்கிய தென் ஆபிரிக்கா ..!#SAvIND #Cricket #BCCI #worldrecord

 

 

 

 

 

 

Previous articleகொண்டாடப்படும் பாபர் அசாம்- தனக்கான ஆட்ட நாயகன் விருதை குஷ்தில் ஷாவுக்கு வழங்கினார்..! (வீடியோ இணைப்பு)
Next articleஉலக சாதனையை கோட்டைவிட்ட இந்தியா ,அதிரடி வெற்றியுடன் தொடரை ஆரம்பித்த தென் ஆப்பிரிக்கா..!