இலங்கையில் இடம்பெற்ற மாகாண அணிகளுக்கிடையிலான போட்டியில் சாம்பியன் ஆனது கண்டி அணி ..!

இலங்கையில் இடம்பெற்ற மாகாண அணிகளுக்கிடையிலான போட்டியில் சாம்பியன் ஆனது கண்டி அணி ..!

இலங்கை கிரிக்கெட் ஏற்பாடு செய்திருந்த மாகாண அணிகளுக்கிடையிலான நான்கு நாட்கள் கொண்ட போட்டி தொடர் இன்று நிறைவுக்கு வந்தது.

3 நாட்கள் முழுவதுமாக போட்டி இடம்பெற்றாலும் மழை காரணமாக இன்றைய 4 ம் நாள் போட்டி முற்று முழுதாக இடம்பெறவில்லை.

முதல் இன்னிங்சில் கண்டி அணி 444 ஓட்டங்களைக் குவித்தது, ஒஷாத பெர்னான்டோ சதமடித்தார் , கமிந்து மென்டிஸ் 89 ஓட்டங்கள் சேர்த்தார், ஜப்னா அணி 272 ஓட்டங்கள் மட்டுமே தான் பெற்றுக்கொண்டது. இதன் அடிப்படையில் முதல் இன்னிங்சில் ஓட்ட வித்தியாசத்தில் கண்டி அணி இந்த தொடரில் சாம்பியன் ஆக அறிவிக்கப்பட்டது.

கண்டி அணி தலைவராக கமிந்து மென்டிஸ், Jaffna அணியின தலைவராக தனஞ்சய டி சில்வாவும் விளையாடினர், சாம்பியனான கண்ட அணிக்கு ஐந்து மில்லியன் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது, இதே போன்று இரண்டாவது இடத்தை பெற்ற Jaffna அணிக்கு இரண்டரை மில்லியன் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டது.

தொடர் நாயகனாக கமிந்து மெண்டிஸ் 5 லட்சம் ரொக்கப் பரிசு தொகையை பெற்றுக் கொண்டார், சிறந்த துடுப்பாட்ட வீரரான ஓஷாத பெர்னான்டோ இரண்டரை லட்சம் ரூபாய் பரிசுத் தொகையைப் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Previous articleஇப்படியொரு சம்பவத்தை நீங்கள் கிரிக்கட்டில் இதைவரை பார்த்திருக்க மாட்டீர்கள்- வீடியோ இணைப்பு..!
Next articleஆசியக்கோப்பை தொடரை நடத்தும் வாயப்பு பறிபோகிறதா ?