இலங்கை அணிக்கு கோலாகல வரவேற்பு -ரசிகர்களுக்கு அழைப்பு..!

அனல் பறக்கும் ஆசியக் கிண்ண தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்திய தசுன் ஷானக தலைமையிலான இலங்கை அணி, 8 வருடங்களின் பின்னர் ஆசியக் கிண்ணத்தின் பெருமையை இலங்கைக்கு மீட்டெடுத்தது.

மாபெரும் வெற்றியீட்டிய இலங்கை அணி நாளை (13) அதிகாலை 04.45 க்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடையவுள்ளதுடன் இலங்கை கிரிக்கெட் அணியினரை வரவேற்று அழைத்துவரும் நிகழ்வும் இடம்பெறவுள்ளது.

விமான நிலையத்தில் வரவேற்பு வைபவத்திற்குப் பிறகு, அணி வெற்றி அணிவகுப்பில் பங்கேற்கும் மற்றும் இலங்கை அணியை ஏற்றிச் செல்லும் ‘டபுள் டெக்கர்’ பேருந்து கொழும்பு-கட்டுநாயக்க பாதையில் பயணித்து கிரிக்கெட் ரசிகர்களுடன் இணையும்.

நாளை காலை 06.30 அளவில் விமான நிலைய வளாகத்தில் இருந்து அணிவகுப்பு ஆரம்பமாகவுள்ளதானால் இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் வீதியின் இருமருங்கிலும் ஒன்றிணையுமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.