இலங்கை அணித்தேர்வு சரியானதாக அமைந்ததா ?

அனுபவம் குறைந்த இலங்கை அணி குஷால் பெரேரா தலைமையில் பங்களாதேஷ் மண்ணில் களமிறங்கி இருந்தது. குணதில்லக்க, குஷால் பெரேரா, குஷால் மென்டிஸ், தனஞ்சய டீ சில்வா, வணிது ஹசரங்க, தசுன் சானக்க, துஸ்மாந்த சமீர என ஏழு பேரும் தரமான ஒருநாள் போட்டிக்கான வீரர்கள் தான்.

டிக்வெல்லவை அணியில் எடுக்காதது மிகப் பெரிய தவறு. டெஸ்ட் போட்டிகளில் 7 ஆவதாக களமிறங்கி தொடர்ச்சியாக அசத்தி வரும் டிக்வெல்வை ஒருநாள் போட்டிகளில் நான்காவதாக அல்லது ஐந்தாவதாக களமிறக்கலாம்.

டாக்கா ஆடுகளம் 2000 களில் இருந்த பிரேமதாதாஸ போன்றது 240+ இலக்கை துரத்தி வெல்லுவது சவாலானது.

ரகீம், ரமீம், சஹிப், மொகமதுல்லா என்று 14 வருடங்களுக்கு மேற்பட்ட சர்வதேச அனுபவத்தை கொண்ட வீரர்கள். லிற்றன் தாஸ், மொசடாக் ஹெசைன், மெஹிடி ஹசன், முஸ்தபிஹூர், சபிடீன் மற்றும் ஷரிபுல் எல்லாருமே தரமான வீரர்கள். பங்களாதேஷ் ஒரு completely well balanced team.

2015 இலிருந்து பங்களாதேஷில் நடைபெற்ற ஒருநாள் தொடர்களில் ஒரு தடவை இலங்கையும் (2019), ஒரு தடவை இங்கிலாந்தும்(2017) மட்டுமே தொடர்களை வென்றிருக்கின்றன.

ஏற்கனவே பாகிஸ்தான், இந்தியா, தென்னாபிரிக்கா, நியூசிலாந்து, மேற்கிந்திய தீவுகள் அனைத்தும் பங்களாதேஷில் நடைபெற்ற ஒருநாள் தொடர்களில் படுதோல்விகளை அடைந்துள்ளன.

இலங்கையின் தோல்வியாக பார்க்கவில்லை. 2023 உலகக் கிண்ணத்தை கைப்பற்ற அதிக வாய்ப்புக்கள் உள்ள பங்களாதேஷின் வெற்றியாகத் தான் பார்க்கின்றேன்.

இலங்கையின் பந்துவீச்சு, களத்தடுப்பு மற்றும் அணித்தலமை சிறப்பாக இருந்தது. இலங்கைக்கு ஒரு வெற்றிகரமான தோல்வி.

இதே அணியில் டிக்வெல்ல, அவிஸ்க பெர்னாண்டோ, அசித பெர்னான்டோ, சாமிக்க கருணாரட்ன மற்றும் ரமேஷ் மெண்டிஸ் போன்றோரை இணைத்து வெற்றி தோல்விகளை கருத்தில் கொள்ளாது ஒரு 5 ஒருநாள் தொடர்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் 2023 இல் ஒரு போட்டித் தன்மையான இலங்கை அணியை எதிர்பார்க்கலாம்.

இதை விடுத்து மீண்டும் மத்தியூஸ், சந்திமாலை அணிக்கு கொண்டுவந்தாலோ அல்லது அணித்தலைவரை மாற்றினாலோ எந்த பலனும் ஏற்படாது என்று நினைக்கின்றேன்.

Dr. ஜெயகணேசன்