ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு ஒரு நாள் முன்னதாக இன்னும் பரபரப்பு செய்திகள் வெளியாகியுள்ளன,
முன்னணி வீரர்களான தனஞ்சய டி சில்வா, அசித பெர்னாண்டோ மற்றும் ஜெஃப்ரி வான்டர்சே ஆகியோரை கோவிட் தாங்கியுள்ளது.

மூவரும் முதல் டெஸ்டில் விளையாடியவர்கள் என்பதோடு பிரவீன் ஜெயவிக்ரமவுடன் சேர்ந்து இவர்களும் அணியை விட்டி நீக்கப்பட்டுள்ளனர்.
எம்புல்தெனியவும் அணியில் இல்லாத காரணத்தால் மொத்தம் 5 வீரர்களை இலங்கை அணி இழந்திருக்கிறது. இதற்கிடையில், லக்ஷன் சண்டகன் அணியில் சேர்க்கப்பட்டதாக தகவல்.
மாற்றீடுகள் உத்தியோகபூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை.







