இலங்கை அணி தொடர்பில் எச்சரிக்கை விடுத்த ஹர்ஷா போக்லே ..!

ஆசியக்கோப்பை தொடரில் இலங்கை அணி சகல அணிகளுக்கும் ஓர் எச்சரிக்கையான அணியாக திகழும் என பிரபல வர்ணணையாளர் ஹர்ஷா போக்லே கருத்து தெரிவித்துள்ளார்.

அவரது கருத்தில், குசல் ஜனித் பெரேரா இலங்கை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு அதிரடி துடுப்பாட்ட வீரர் ஆவார். குசல் ஜனித்தின் தோள்பட்டை காயம் இல்லாவிட்டால், இந்த ஆண்டு ஆசிய கோப்பை போட்டியில் இலங்கை அணி எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனை தவிர்க்கப்பட்டிருக்கும்.

இலங்கை அணியின் துடுப்பாட்ட வரிசையை பலப்படுத்துவதற்கு தெரிவுக்குழுக்களுக்குக் கிடைத்த சிறந்த தெரிவாக குசல், வேகத்துடன் ஆரம்ப துடுப்பாட்ட வீரராகவும், மூன்றாம் இலக்க துடுப்பாட்ட வீரராகவும் இருந்தார்.

குசல் ஜனித் பெரேரா இலங்கை அணியில் இல்லாததால் இலங்கை அணிக்கு இது பெரிய இழப்பாகும் என்று ஸ்டார் ஸ்போர்ட்ஸில் ஒரு நிகழ்வில் ஹர்ஷா போக்லே கூறினார்.

“குசல் ஜனித் பெரேரா ஆசியக் கோப்பையில் விளையாடாதது மற்றும் அவரது தாக்குதல் தொடக்கத்தை இழந்தது இலங்கைக்கு மிகப்பெரிய இழப்பாகும்.

மேலும் இலங்கை அணி அனுபவம் குறைந்த பலம் வாய்ந்த அணியாகும்.இந்த நேரத்தில் மற்ற அணிகள் இலங்கை அணி குறித்து கவனமாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.