இலங்கை கிரிக்கட்டின் இன்னுமொரு முக்கியஸ்தர் அவுஸ்ரேலியாவில் உதவிப் பயிற்சியாளர் பதவியில்!

இலங்கை கிரிக்கட்டின் இன்னுமொரு முக்கிய பிரபலமான அனுஷ சமரநாயக்க எனும் முன்னாள் கிரிக்கட் வீரர்  அவுஸ்ரேலியாவில் உதவிப் பயிற்சியாளர் பதவியில் இணைத்துக்கொள்ளபட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் பிரபல கழகமான முல்கிரேவ் கிரிக்கெட் கிளப் 2021/22 சீசனுக்கான கிளப்பின் புதிய உதவி பயிற்சியாளராக அனுஷா சமரநாயக்க கையெழுத்திடுவதாக அறிவித்துள்ளது.

2000 முதல் 2015 வரை இலங்கையின் பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்த அனுஷ அனுபவத்துடன் எங்களிடம் வருகிறார் என அந்த கழகம் குறிப்பிட்டது.

இலங்கை மலிங்கா மற்றும் நுவான் குலசேகர உட்பட பல இலங்கை வேகப்பந்து வீச்சாளர்களின் வளர்ச்சிக்கு அவர் பங்களித்துள்ளார். அனுஷாவை கிளப்பில் வரவேற்பதில் தயவுசெய்து எங்களுடன் சேருங்கள் ”என்று முல்கிரேவ் கிரிக்கெட் கிளப் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

2021/22 சீசனுக்காக முல்கிரேவ் கிரிக்கெட் கிளப்பில் இலங்கையின் முன்னாள் தலைவர் டி.எம். தில்ஷன் அணியின் தலைவராக இருப்பார், உபுல் தரங்கவும் அணியில் உள்ள நிலையில் இலங்கையின் ஜாம்பவான் சனத் ஜெய்சூரியா தலைமை பயிற்சியாளராக முன்னர் அறிவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

முல்கிரேவ் கிரிக்கெட் கிளப் விக்டோரியாவின் கிழக்கு கிரிக்கெட் சங்கத்தின் பிரிவு 3 இல் விளையாடும் ஓர் கழகம் என்பதும் கவனிக்கத்தக்கது.

இலங்கை அணியைத் தவிர இலங்கையர்கள் வெவ்வேறு நாடுகளின் கிரிக்கெட் வளர்ச்சிக்கு தமது பங்களிப்பு நல்கியவண்ணமே உள்ளனர்.