இலங்கை கிரிக்கட்டில் சூதாட்டம்- இருவர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு..!

இலங்கை கிரிக்கட் அணி வீரர்கள் இருவர் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது

தென்னாபிரிக்க அணியுடனான 20க்கு 20 தொடரிலேயே இரண்டு வீரர்களும் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் ஒருவரும், சுழற்பந்து வீச்சு சகல துறை ஆட்டக்காரர் ஒருவர் மீதுமே இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் குறித்த இரு வீரருக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

இதேவேளை, அடுத்த 24 மணி நேரத்தில் இது தொடர்பில் இலங்கை கிரிக்கட் அணியின் தேர்வாளர்கள் தீர்மானமொன்றை எடுக்கவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Via- CapitalNews