இலங்கை கிரிக்கெட் அணிக்குள்ளும் நுழைந்தது கொரோனா- அடுத்து என்ன நடக்கும்?
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான மட்டுப்படுத்தப்பட்ட தொடர் எதிர்வரும் 13 ம் திகதி ஆரம்பிக்கவுள்ள நிலையில், இலங்கை கிரிக்கெட் அணிக்குள்ளும் கொரோனா நுழைந்த தகவல் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்தில் சுற்றுலாவை மேற்கொண்ட இலங்கை அணி, தாயகம் திரும்பி இந்திய தொடரை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.
இந்தநிலையில் இங்கிலாந்தின் அணி வீரர்கள் மூவர், பயிற்சியாளர் குழாம் என மொத்தம் 7 பேருக்கு கொரோனா தோற்று உறுதியானது. இந்த காரணத்தால் இலங்கை வீரர்களுக்கும் கொரோனா தொற்று இருக்கலாமா என் சந்தேகம் வெளியிடப்பட்டது.
அதனால் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளர் கிராண்ட் பிளவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியமை உறுதியானது.
இந்த சிக்கலால் ஸ்ரீலங்கா கிரிக்கெட் தரப்பு அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட போகிறார்கள் என்பதும், இவரோடு தொடர்பில் இருந்த வீரர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டால், இந்திய தொடருக்கான அணியை தேர்வு செய்வதில் இலங்கை கிரிக்கெட் தரப்பு சிக்கலை எதிர்கொள்ளலாம் என்றே கருதப்படுகின்றது.