இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வாளராக செயல்பட்ட அசந்த டீ மெல் பதவி விலகுவதாக நேற்று(27) இரவு அறிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரில் 2-0 என்று இலங்கை அணி தோல்வியை தழுவிய பின்னரே இந்த திடீர் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முன்னதாக அணியின் முகாமையாளராக செயல்பட்ட அசந்த,அண்மையில் அந்த பதவியிலிருந்து விளக்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எப்படியாயினும் இலங்கை கிரிக்கெட் ரசிகர்களை பொறுத்தவரை இந்த முடிவு மிக்க மகிழ்சியானதே .