இலங்கை கிரிக்கெட் அணியின் முக்கிய பதவியில் மஹேலவை நியமித்தது ஸ்ரீலங்கா கிரிக்கெட்..!
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான மஹேல ஜெயவர்தன இலங்கை கிரிக்கெட் அணியின் உலககிண்ண போட்டிகளுக்கான ஆலோசகர் பதவியில் மஹேல ஜெயவர்தனா நியமிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது .
மஹேல ஒக்டோபர் 16 முதல் 23 ம் திகதிவரை இலங்கை கிரிக்கெட் அணியுடன் இணைந்திருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த காலப்பகுதியில் இலங்கை அணி நமீபியா, நெதர்லாந்து மற்றும் அயர்லாந்து அணிகளை எதிர்கொள்ளவுள்ளது. இதன்போது, அணியுடன் இணைந்திருக்கும் மஹேல இலங்கை அணிக்கான திட்டங்களில், முகாமைத்துவத்துக்கு உதவுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் இலங்கை 19 வயதுக்குட்பட்டோர் அணியுடன் சுமார் 5 மாதக்காலப்பகுதிவரை மஹேல ஜயவர்தன இணைந்து ஆலோசகராக செயற்படுவதுடன் அடுத்தாண்டு மேற்கிந்திய தீீீவுகளில் இடம்பெறவுள்ள இளையோர் உலக கிண்ண போட்டிகளில் இலங்கை U19 அணிக்கும் ஆலோசகராக செயல்படுவா ர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வரும் மஹேல ,ஐபிஎல் போட்டிகள் நிறைவுக்கு வந்த பின்னர் இலங்கை கிரிக்கெட் அணியின் உலகக்கிண்ண போட்டிக்கான முதல் சுற்றுப் போட்டிகளில் ஆலோசகராக செயல்படுவார் என அறிவித்திருக்கிறது.