இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்ள காத்திருக்கும் இந்திய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான 3 ஒருநாள் போட்டிகளில் 3 இருபதுக்கு இருபது போட்டிகளுக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
20 பேர் கொண்ட அணியின் தலைவராக ஷிகார் தவான் பயிரிடப்பட்டுள்ள அதேநேரம் உதவித் தலைவராக புவனேஸ்வர் குமார் அறிவிக்கப்பட்டுள்ளார்.
20 பேர் கொண்ட அணியில் 6 புதுமுகங்கள் இடம்பெற்றுள்ளன.
அறிவிக்கப்பட்டிருக்கும் அணியில் பெங்களூர் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தெவுதுட் படிக்கல், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ருத்ராஜ் கைக்வாட்,மற்றும் கிருஷ்ணப்பா கௌதம், அதேபோன்று கொல்கத்தா அணியின் வீரர்களான வருண் சக்கரவர்த்தி , நிதிஷ் ராணா ஆகியோருடன் ஐபிஎல் தொடரில் இம்முறை அறிமுகமான குமார் சங்கக்காரவின் பஞ்சாப் அணி வீரர் சேட்டன் சஹாரியா ஆகிய புதுமுக வீரர்களும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
ஜூலை 13,16,18 ம் திகதிகளில் ஒருநாள் போட்டிகளும் ,21,23,25 ம் திகதிகளில் T20 போட்டிகளும் இடம்பெறவுள்ளன, அத்தனையும் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்திலேயே இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
India’s squad: Shikhar Dhawan (Captain), Prithvi Shaw, Devdutt Padikkal, Ruturaj Gaikwad, Suryakumar Yadav, Manish Pandey, Hardik Pandya, Nitish Rana, Ishan Kishan (Wicket-keeper), Sanju Samson (Wicket-keeper), Yuzvendra Chahal, Rahul Chahar, K Gowtham, Krunal Pandya, Kuldeep Yadav, Varun Chakravarthy, Bhuvneshwar Kumar (Vice-captain), Deepak Chahar, Navdeep Saini, Chetan Sakariya
Net Bowlers: Ishan Porel, Sandeep Warrier, Arshdeep Singh, Sai Kishore, Simarjeet Singh