இலங்கை கிரிக்கெட் மீண்டெழும் – ரசிகனின் பார்வை..!

பொதுவாக இலங்கை கிரிகெட் ஆட ஆரம்பித்த காலம் முதற்கொண்டு இன்றுவரை இலங்கை அணி அவுஸ்திரேலியா, இந்தியா போன்ற அணிகளுடன் மோதபோகிறது என்றால் ஹேட்டர்கள் நடுநிலைகள் என அத்தனை பேரும் அத்தொடரின் முடிவினை கூறிவிடுவார்கள். இதில் எல்லாம் எங்க இலங்கை வின் பன்ன போறான். ஈசியா வைட்வோஷ் பன்னிட்டு போகபோரானுங்க ஆஸி இந்தியாலாம் னு தான் பலபேர் சொல்லுவாங்க…

அர்ஜுனாவின் காலங்களில் நான் கிரிகெட் பார்த்ததில்லை அப்போதும் அப்படி தான் கூறியிருப்பார்கள் காரணம் அப்போதிருந்த ஆஸி வீழ்த்துவது என்பது டொலரினை 100/- கொண்டுவருவதற்கு சமன்.. சங்கா மஹில காலங்களிலும் ஆஸி அவ்வாறு தான் காணப்பட்டது எனினும் இலங்கை கிரிகெட் மீது நாம் கொண்டிருந்த அதீத அன்பும் நம்பிக்கையும் நாங்கள் சீரிஸ் அடிப்போம் என்ற எண்ணத்தையே எமக்கு கொடுக்கும்.

2015களில் நிலமை தலைகீழாகி இலங்கையில் இப்போது இருக்கும் வங்குரோத்து போன்று இலங்கை கிரிகெட் பேங்க்ரப்ட் ஆகி இருந்த்தது. இப்போது comeback கொடுப்பார்கள் அடுத்த தொடரில் கம்பேக் கொடுப்பார்கள் அதுக்கடுத்த தொடரில் கொடுப்பார்கள் என ஏங்கி ஏங்கி காத்துகிடந்த காலங்கள் ஏராளம். தோல்விகளின்போது இலங்கை அணியை நக்கலடித்து கலாய்த்தவர்கள் எல்லாம் ஆஸி உடனான சீரிஸ் வின் இல் பங்கு கொள்கிறார்கள். மன்னிக்க முடியாது அவர்களை எனினும் இப்போது நாங்கள் வெற்றி கொண்ட்டாட்டத்தில் இருப்பதால் அவர்களை விட்டு விடலாம்.

இந்த ஆஸி டுவரில் நாம் இதுவரை சில வீரர்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையும் அவர்களது திறமை தொடர்பாக நாம் எழுப்பிய கேள்விகளையும் சுக்குநூறாக்கி அவை அனைத்திற்கும் அவர்களது பெர்போமென்ஸ்களால் எமக்கு பதிலளித்து இருக்கிறார்கள்…

குசால் மென்டிஸ் சிகரட் கேஸ் இல் சிக்குண்ட பின் கூட அவரை கலாய்த்திருந்தாலும் மென்டிசை விட்டுகொடுத்ததில்லை. காரணம் மென்டிஸ் இடம் இருக்கும் திறமை இப்போதிருக்கும் சிறந்த பெட்ஸ்மேன்களுடன் போட்டிபோடுமளவானது. எனினும் தனது திறமையினை மென்டிஸ் நிருபிக்க தவறியது மென்டிஸ் மீது பலரும் அதிருப்தி அடைய காரணமாய் அமைந்தது. அவை அனைத்தையும் தூக்கி சாப்பிடுர மாதிரி இந்த சீரிஸ் இல் மென்டிஸ் இன விளையாட்டு காணப்பட்டது.

ஜெப்ரி வென்டர்சேவை ஹசரங்கவிற்கு பதிலாக இறக்கிய போது இலங்கை சனத்தொகையில் வென்டர்சே தவிர்ந்து ஏனைய அனைத்து பேரும் வென்டர்சேவை கலாய்த்தோம். அதற்கான காரணம் இத்தனை காலம் வென்டேர்சேவின் விளையாட்டினை நாம் பார்த்து வந்த்தது தான். ஆனால் எமது கணிப்புகள் அனைத்தையும் உடைத்தெறிந்து வென்டேர்சே தன்னை நிருபித்திருக்கிறார்.

இவ்வாறே DDS , Charith Asalanka, Pathum Nissanka, Chamika என அனைத்து பேரும் பங்களிப்பு செய்தே நாம் இந்த வரலாற்று வெற்றியை பெற்றிருக்கிறோம்…

பத்தொன்பது வயதுகளே ஆன வெல்லாலகே இப்போட்டிகளில் காட்டிவரும் திறமைய பார்க்கும்போது எதிர்காலத்திற்கான ஓர் சிறந்த investment ஆகவே கருதவேண்டும். இது வெறும் ஆரம்பம் தான் பொருத்திருந்து பார்ப்போம் வெல்லாலகே எவ்வளவு சிறப்பாக ஆடுகிறார் என்று…

தசுன் சானகவின் கெப்டென்சியில் எனக்கு சில விமர்சனங்கள் இருந்தாலும் எம்மிடம் இருக்கும் மிகச்சிறந்த கெப்டன் மெட்டீரியல் தசுன் தான். இளம் அணியினை வைத்துகொண்டு பாகிஸ்தான், இந்தியா, ஆஸி போன்ற நாடுகளுடன் எமக்கு சீரிஸ் வெற்றிகளை பெற்றுதந்த கெப்டன். பிழைகளை திருத்திகொண்டால் இன்னுமின்னும் வெற்றிகள் கைகூடும்.

எல்லோராலும் 10-0 என எதிர்வு கூறப்பட்ட இந்த தொடர் இப்போது 3-4 என்ற கணக்கில் உள்ளது. நாம் அர்ஜூனா காலத்தில் உலக கிண்ணம் ஜெய்த்த அணி இருந்தபோதும் நாம் வெற்றி பெறுவோம் என்றே நம்பினோம், சங்கா மஹில காலத்தில் பல உலக கிண்ணங்கள் தோற்ற போதும் வெற்றி பெறுவோம் என்றே நம்பினோம், சந்திமல், மெதிவ்ஸ் காலத்திலோம் நம்பினோம் இப்போது அசலங்க ஹசரங்க காலத்திலும் நம்பினோம் , நம்புகிறோம், நம்புவோம்…

எங்களை நய்யாண்டி செய்தவர்கள் இவர்கள் இனி இல்லை என்றவர்கள் எல்லாம் இப்பபோது வாழ்த்துகிறார்கள்…. இனி இந்த அணியை சப்போர்ட் பன்னி வேலை இல்லை என்றவர்கள் இப்போது எமது வெற்றியில் பங்குகொள்கிறார்கள்…

ஆனால் வெற்றியிலும் தோல்வியிலும் அதீத அவமானங்களிலும் எமது அணியை விட்டு கொடுத்ததில்லை இனியும் விட்டுகொடுக்க மாட்டோம்….

இலங்கை கிரிகெட் மீண்டெழும்… ???

✍️ Sajeeth Ahamed

YouTube தளத்துக்கு செல்ல ?

 

 

 

 

 

Previous articleஹாட் ரிக் வெற்றி – 30 ஆண்டுகளுக்குப் பின்னர் தொடர் இலங்கை வசம்..!
Next articleஇலங்கை வருகிறது பாகிஸ்தான் கிரிக்கெட் அணி..!