இலங்கை வீரர்களின் டெஸ்ட், ஒருநாள் மற்றும் 20-20 போட்டி கட்டணத்தை அதிகரிக்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இதன்படி, டெஸ்ட் போட்டி கட்டணத்தை 100%, ஒருநாள் மற்றும் 20-20 போட்டி கட்டணம் 25% உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெற்றி, டிரா அல்லது தோல்வி என்பதைப் பொறுத்து கொடுப்பனவுகள் மாறுபடும்.
மேலும், வருடாந்த கிரிக்கெட் ஒப்பந்தத்தில் 41 வீரர்கள் உள்ளனர் மற்றும் அவர்கள் 6 பிரிவுகளின் கீழ் வருடாந்த ஒப்பந்தத்தை பெற்றுள்ளனர்.
A அணியின் வீரர்கள் வருடாந்த ஒப்பந்தத்தில் உள்வாங்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.