இலங்கை தலைமை பயிற்சியாளர் பதவி- ஃபார்ப்ரேஸ் நிலைப்பாடு வெளியானது..!

இலங்கை தலைமை பயிற்சியாளர் பதவி- ஃபார்ப்ரேஸ் நிலைப்பாடு வெளியானது..!

இலங்கை ஆடவர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியை பால் ஃபார்ப்ரேஸ் நிராகரித்துள்ளதாகவும் வார்விக்ஷயர் அணியில் தொடரவே அவர் விரும்புவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஃபார்ப்ரேஸ் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை கிரிக்கெட்டை விட்டு வெளியேறினார் – தலைமைப் பயிற்சியாளராக இரண்டு வருட ஒப்பந்தத்தில் நியமிக்கப்பட்டிருந்தாலும், திடீரென மூன்று மாதங்களுக்குள் குறித்த பதவியை விட்டு விலகி இங்கிலாந்து தேசிய அணியுடன் பீட்டர் மூர்ஸுக்கு உதவியாளராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

கடந்த ஆண்டு இறுதியில் டெர்பிஷையருக்குச் செல்ல ஒப்புக்கொண்ட தென்னாப்பிரிக்காவின் மிக்கி ஆர்தர் இலங்கையின் தலைமை பயிற்சியாளர் பதவியைவிட்டு வெளியேறியதைத் தொடர்ந்து SLC க்கு புதிய தலைமை பயிற்சியாளர் தேவை ஏற்பட்டது.

இலங்கையில் உள்ள உள்ளூர் அறிக்கைகள், ஃபார்ப்ரேஸ் இந்தப் பதவிக்கு முதலில் விண்ணப்பிக்கவில்லை என்றும், ஆனால் புதிய தலைமைப் பயிற்சியாளரை ஆட்சேர்ப்பு செய்யும் அரவிந்த டீ சில்வா தலைமையிலான தொழில்நுட்பக்க குழு 30 அல்லது அதற்கு மேற்பட்ட விண்ணப்பதாரர்களின் தரம் போதுமானதாக இல்லை என்று முடிவு செய்ததைத் தொடர்ந்து ஃபார்ப்ரேஸை அணுகியதாகவும் செய்திகள் வெளியாகின.

எது எவ்வாறாயினும் இவர் இலங்கையின் தலைமை பயிற்சியாளர் பதவியை ஏற்க விரும்பவில்லை என செய்திகள் குறிப்பிடும் அதேநேரம் இதுதொடர்பில் வார்விக்ஷயர் கழகம் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.

குறிப்பாக குடும்பத்திற்காக தியாகம் செய்ய வேண்டியிருக்கும் என்பதால், வார்விக்ஷயர் அணியின் இயக்குநராகத் தொடருவேன் என்கிறார்.

எனினும், இந்தியா, அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து தவிர, இலங்கையும் பயிற்சியாளர்களுக்கு அதிக சம்பளம் வழங்குவதுடன், இவ்வாறான நிலையில் இரண்டு வருட ஒப்பந்தத்தை அவர் நிராகரித்தமை இலங்கை கிரிக்கெட்டை மீண்டும் இக்கட்டான சூழ்நிலையில் தள்ளியது எனலாம்.

ஆகவே இலங்கையின் அடுத்த பயிற்சியாளர் குறித்த கேள்விக்கு இன்னும் விடை கிட்டவில்லை என்பதுவே உண்மையானது.