இலங்கை தேர்வுக்குழுவின் உடற்தகுதி சவாலை வென்ற வீரர்கள் யார் தெரியுமா ?

சிம்பாப்வே சுற்றுப்பயணத்திற்கான இலங்கை கிரிக்கெட் அணிக்கான வீரர்களைத் தெரிவு செய்வதற்கான உடற்தகுதிப் பரீட்சை நேற்று (08) கொழும்பு சுகததாச மைதானத்தில் நடைபெற்றது.

விளையாட்டு வீரர்கள் 2 கி.மீ., ஓடுவதற்கு 8 நிமிடம் 10 வினாடிகள் கொடுக்கப்பட்ட நேரம்.

சாமிக்க கருணாரத்ன, சரித் அசலங்க, தினேஷ் சந்திமால், குசல் மெண்டிஸ், நிரோஷன் டிக்வெல்ல, அகில தனஞ்சய, அஷேன் பண்டார மற்றும் மகேஷ் தீக்ஷன ஆகியோர் இரண்டு கிலோமீற்றர் தூரத்தை 7 நிமிடத்துக்கும் குறைவான நேரத்தில் சவாலை முறியடித்துள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

இதேவேளை, கொவிட் தொற்று காரணமாக அவிஷ்க பெர்னாண்டோ நேற்றைய தினம் உடற்தகுதி பரிசோதனையில் கலந்து கொள்ளவில்லை, அதேவேளை தலைவர் தசுன் ஷனக மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோரும் கொவிட் வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், உடற்தகுதி பரிசோதனையில் பங்கேற்கவில்லை.

மேலும், காயம் காரணமாக ஏஞ்சலோ மெத்தியூஸ் கலந்து கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, சிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை அணியில் நுவான் துஷார மற்றும் ஜனித் லியனகே ஆகிய புதுமுகங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி ஜனவரி 16 ஆம் திகதி பல்லேகல மைதானத்தில் தொடங்க உள்ளது.

Previous articleகொரோனாவால் சிம்பாப்வே தொடரை தவறவிடும் இலங்கையின் இரு இளம் வீர்கள்..!
Next articleநாமலின் கோரிக்கையை ஏற்பாரா பானுக ராஜபக்ச- நாமல் விடுத்த திடீர் அழைப்பு..!