இலங்கை மேற்கிந்திய தீவுகள் தொடர் பிற்போடப்பட்டது ஶ்ரீலங்கா கிரிக்கட் அறிவிப்பு !

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் இம்மாதம் 20ஆம் திகதி ஆரம்பமாக இருந்த தொடர் பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆதர், ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் லஹிரு திரிமான்ன ஆகியோருக்கு ஏற்பட்ட கொரோனா தொற்று காரணமாக இந்த தொடரை குறித்த திகதிகளில் நடத்த முடியாது உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இந்த தொடர் பிற்போடப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் உத்தியோகபூர்வமாக அறிவித்தது.

ஆயினும் மீளவும் போட்டி இடம்பெறும் திகதிகள் தொடர்பான விபரங்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.

Previous articleஇந்திய, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் ஆரம்பம்
Next articleவாய்ப்பை தவறவிட்ட பான்ட் !