இலங்கை அணியின் முன்னணி பந்துவீச்சாளர் துஷ்மந்த சமீரவின் இடது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆசியக் கிண்ணப் போட்டியில் இலங்கை அணிக்காக விளையாட முடியாத நிலை உருவாகியுள்ளது.
டுபாயில் ஆகஸ்ட் 27ம் தேதி தொடங்கும் ஆறு நாடுகள் பங்கேற்கும் போட்டிக்கு பெயரிடப்பட்ட 20 பேர் கொண்ட இலங்கை அணியில் சமீரவும் ஒருவர்.
சமீரவின் உபாதை காரணமாக இலங்கை அணியில் நுவான் துஷாரா மாற்று வீரராக இடம்பிடித்துள்ளார்.
ஆரம்ப அணியில் ஏற்பட்ட காயம் காரணமாக இலங்கை ஏற்கனவே கசுன் ராஜித மற்றும் பினுர பெர்னாண்டோ ஆகியோரை இழந்துள்ள நிலையில் சமீரவின் விலகல் அணிக்கு நெருக்கடியை உருவாக்கியுள்ளது.
ஏற்கனவே ஆசியக் கிண்ணத்துக்கான இந்திய அணியில் இடம்பிடித்த பிரதான வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் அஃ்ப்ரிடி ஆகியோர் உபாதைகள் காரணமாக ஆசியக்கிண்ண போட்டிகளை தவறவிடுகின்றனர்.
இந்த நிலையில் இலங்கையின் பிரதான பந்துவீச்சாளர் சமீரவும் விலகியுள்ளமை ரசிகர்களுக்கு மிகுந்த வேதனையை தோற்றுவித்துள்ளது.