இலங்கை வீரர்களை வியப்புகள் தள்ளிய சமிந்த வாஸ் -செய்த சாதனை என்ன தெரியுமா ?
இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட முன்னாள் வேகப்பந்து நட்சத்திரம் வாஸ் இலங்கை வீரர்களை இன்று வியப்புக்குள் தள்ளினார்.
ஏற்கனவே இருந்த வேகப்பந்து
பயிற்சியாளர் டேவிட் சாகர் பதவி விலகியதை தொடர்ந்து அடுத்து வரும் மேற்கிந்தியத் தீவுகள் அணியுடனான தொடருக்கான இலங்கை வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக வாஸ் இன்று நியமிக்கப்பட்டார்.
இலங்கையின் வீரர்களுக்கான உடற்தகுதி சோதனைக்கு புதிய நடைமுறை இப்போது பின்பற்றப்பட்டு வருகிறது .
2 கிலோ மீட்டர்கள் ஓட்டம் , 2 கிலோ மீட்டர் தூரத்தை ஒவ்வொரு வீரரும் 8 நிமிடங்களும் 35 செக்கன்களில் முடிக்க வேண்டும் என்று சொல்லி அவர்களுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டது .
ஏராளமான இலங்கையின் இளம் வீரர்கள் தடுமாறிக் கொண்டிருக்க, இந்த இரண்டு கிலோ மீட்டர் தூரத்தை 7நிமிடங்கள் 30 செக்கன்களிலும் ஓடி முடித்துள்ளார் சமிந்த வாஸ் .
இத்தனைக்கும் சமிந்த வாஸ்க்கு வயது 47 என்பது குறிப்பிடத்தக்கது .
இலங்கையின் முன்னாள் வீர்ர்கள் எவ்வளவு உடற்தகுதியுடன் இருந்தார்கள் என்பதற்கு சமிந்த வாஸ் மிகப்பெரிய உதாரணம்.