இலங்கை A அணியை சந்திக்கவுள்ள தென்னாபிரிக்க A அணி..!

சுற்றுலா இலங்கை A அணியுடன் நடைபெறவுள்ள ஒரு நாள் மற்றும் நான்கு நாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான தென்னாபிரிக்க A அணிகள் பெயரிடப்பட்டுள்ளன.

பெப்ரவரி மாதம் நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட தென்னாபிரிக்காவின் இரண்டாம் நிலை அணியின் தலைவராக இருந்த நீல் பிராண்ட், இலங்கை A அணிக்கு எதிரான தென்னாபிரிக்க நான்கு நாள் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Kyle Verreynne ODI அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஓகஸ்ட் 31ஆம் திகதி முதல் செப்டெம்பர் 18ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இலங்கை A அணியின் தென்னாபிரிக்கப் பயணத்தில் இரண்டு நான்கு நாள் போட்டிகள் மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகள் அடங்கும்.

தென்னாப்பிரிக்கா A ஒரு நாள் அணி:

கைல் வெர்ரேய்ன் (c), டேவிட் பெடிங்ஹாம், ஈதன் போஷ், மேத்யூ ப்ரீட்ஸ்கே, டெவால்ட் ப்ரீவிஸ், டோனி டி ஜோர்ஜி, தயான் கலீம், டிரிஸ்டன் லூஸ், மிஹ்லாலி மபோங்வானா, அண்டிலே மொககனே, செனுரன் முத்துசாமி, ஆண்டிலே பெஹ்லுக்வாயோ, ஆண்டிலே சிமெலேன், லுத்தோ சிமெலேன்,

தென்னாப்பிரிக்கா A நான்கு நாள் அணி:

நீல் பிராண்ட் (c), மார்க்வெஸ் அக்கர்மேன், மேத்யூ ப்ரீட்ஸ்கே, டெவால்ட் ப்ரெவிஸ், ட்ஷெபாங் டித்தோல், ஜீன் டு பிளெஸ்ஸிஸ், பேட்ரிக் க்ரூகர், ரிவால்டோ மூன்சாமி, மிஹ்லாலி மபோங்வானா, மைக்கேல் பிரிட்டோரியஸ், சினெதெம்பா கெஷில், லூத்தோ சிபம்லா, ப்ரீனெலன் கோ ஸ்வராயன்

 

 

Previous articleஒரே விளையாட்டில் இந்தியா மூன்று பதக்கங்களை வென்று சாதனை..!
Next articleடெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்த ரூட்..!