இளம் வீரர்கள் அதிரடியில் இலங்கையை இலகுவாக பந்தாடியது இந்தியா …!

இளம் வீரர்கள் அதிரடியில் இலங்கையை இலகுவாக பந்தாடியது இந்தியா …!

இலங்கை கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் இந்திய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டியில் பிரேமதாச மைதானத்தில் நிறைவுக்கு வந்துள்ளது .

இந்தியாவின் தேசிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணத்தில் இருக்கும் நிலையில் இப்போது இலங்கையில் தவான் தலைமையிலான இரண்டாம்தர அணி இலங்கை தொடரில் பங்கேற்று வருகிறது .

இந்த போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.  இலங்கை சார்பாக பானுக ராஜபக்சவிற்கு அறிமுகம் கிடைத்தது, இதேபோன்று இந்தியா சார்பில் சூர்யகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷான் ஆகியோர் அறிமுகம் மேற்கொண்டனர்.

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி பலமான ஒரு ஓட்ட எண்ணிக்கையை கடந்த்து. 9 விக்கெட்டுகளை இழந்து 262 இலங்கை அணியால் குவிக்கப்பட்டன.

சமிக்க கருணாரத்ன ஆட்டமிழக்காது 43 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தார்.

இந்தியாவின் பந்துவீச்சில் சஹால் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

பதிலளித்து 263 எனும் இலக்கோடு துடுப்பெடுத்தாடிய இந்திய அணிக்கு பிரித்வி ஷா மற்றும் ஷிகார் தவான் ஆகியோர் ஆரம்ப வீரராக களம் புகுந்தனர்.

ஆரம்பம் முதலே அதிரடிகள் மிரட்டியே பிரித்வி ஷா 24 பந்துகளில் 43 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

அதனைத் தொடர்ந்து ஷிகார் தவான் ,கிஷான் ஜோடி இணைந்து அசத்தியது. இஷான் கிஷான் இன்று அறிமுக போட்டியிலேயே  அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார்.

இன்று அவர் சந்தித்த முதலாவது பந்துவீச்சை சிக்சருக்கு இஷன் கிஷன் விரட்டியிருந்தார், ஏற்கனவே T20 அறிமுகமானபோது அப்போதும் அரைச்சதம் அடித்த இஷன் கிஷன், இன்று அவருடைய 23 வது பிறந்த தினத்தில் ஒருநாள் போட்டியில் அறிமுகமாகி, அறிமுக போட்டியிலேயே அரைசதம் அடித்தார்.

இறுதியில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இந்த  போட்டியில் வெற்றி பெற்று அசத்தியது இந்திய அணி. தவான் ஆட்டமிழக்காது அரைசதம் அடித்து அணிக்கு இலகுவாக வெற்றியைத் தேடிக் கொடுத்தார்.

3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா இன்றைய வெற்றி மூலமாக 1-0 என முன்னிலை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணிக்கு எதிராக இந்திய அணி பெற்றுக்கொண்ட ஒன்பதாவது தொடர்ச்சியான வெற்றியாக இந்த வெற்றிி அமைந்தது.

இது மாத்திரமல்லாமல் இலங்கை அணிக்கு 17 இன்னிங்ஸ்களில் ஆயிரம் ஓட்டங்களை குவித்து ஷிகார் தவான் சாதனை படைத்தமையும் சுட்டிக்காட்டக்கூடிய விஷயமாக இருக்கிறது.

டிராவிடின் தலைமைத்துவத்தில் இந்திய தேசிய கிரிக்கெட் அணிக்கு முதல் வெற்றி கிடைத்தது, இரண்டாவது போட்டி இதை பிரேமதாஸ மைதானத்தில் வருகிற 20 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.