நேத்து டெல்லிக்கு எதிரான மேட்ச்ல மும்பை இந்தியன்ஸ் டீம் பிளேயர் சூர்யா குமார் யாதவ் மேன் ஆஃப் தி மேட்ச் அவார்ட் வாங்கினதுக்கு அப்புறம் ரொம்பவே இன்ட்ரஸ்டிங்கான ஒரு விஷயத்த சொல்லி இருக்காரு.
அது என்னன்னு பாத்தீங்கன்னா,
இப்ப 13 மேட்ச் ஆச்சு. இன்னைக்கு என் பொண்டாட்டி ஒரு வேடிக்கையான விஷயம் சொன்னா. ‘உனக்கு மேன் ஆஃப் தி மேட்ச் அவார்ட் மட்டும் தான் கிடைக்கல, மத்த எல்லாம் கிடைச்சிருக்கு’ன்னு சொன்னா!
இந்த அவார்ட் இன்னைக்கு ரொம்ப ஸ்பெஷல். டீம் பாயிண்ட் ஆஃப் வியூல இந்த இன்னிங்ஸ் ரொம்ப முக்கியம், அதுவும் இந்த மேன் ஆஃப் தி மேட்ச் ட்ராஃபி அவளுக்காகத்தான்…
இப்படிப்பட்ட மொமென்ட்ஸுக்காக அவ காத்துட்டு இருப்பா, நாங்களும் கண்டிப்பா செலிப்ரேட் பண்ணுவோம், அதுக்காகத்தான் வெயிட் பண்ணிட்டு
இருக்கோம்❤️
ஒரு பேட்டர் கடைசி வரைக்கும் நிக்கிறது ரொம்ப முக்கியமா இருந்துச்சு.
எங்கேயாவது ஒரு ஓவர்ல 15-20 ரன் வரும்னு எங்களுக்குத் தெரியும், அதனாலதான் கடைசி வரைக்கும் வெயிட் பண்ணோம்…
நடுவுல நம்மன் வந்து என்கூட சேர்ந்து ஆடிய விதமும் ஒரு டர்னிங் பாயிண்ட்டா இருந்துச்சு🔥
இப்படி சொல்லி இருக்காரு நம்ம ஸ்கை!
நண்பர்களே! சூர்யா குமார் யாதவ் இதே மாதிரி இந்தியன் கிரிக்கெட் டீமுக்கும் விளையாடினா நல்லா இருக்கும்ல!?
ஆனா அது எப்படி திமிங்கலம் மும்பை இந்தியன்ஸ்னு வந்துட்டா மட்டும் தொடர்ச்சியாக நல்லா விளையாடுற? எனக்கு புரியலப்பா!!
#suryakumaryadav #sky #manofthematch #potm #ipl #ipl2025 #MIvsDC #cricket #cricketfans #cricketlovers #cricketnews