உலகக்கிண்ண போட்டிகளுக்காக ஆப்கானிஸ்தானுக்கு புதிய ஆலோசகர் நியமனம்..!

உலகக்கிண்ண போட்டிகளுக்காக ஆப்கானிஸ்தானுக்கு புதிய ஆலோசகர் நியமனம்..!

அடுத்த வரவுள்ள ஐசிசி டுவென்டி20 உலக கிண்ண போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணியினுடைய உலககிண்ண போட்டிகளுக்கான ஆலோசகராக முன்னாள் இங்கிலாந்து பயிற்சியாளரும் முன்னாள் ஜிம்பாப்வே வீரருமான ஆன்டி பிளவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்றைய நாளில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை இதனை அறிவித்துள்ளது.

இங்கிலாந்து அணி T20 உலகக்கிண்ணம் வென்ற போது அப்போதைய இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக பிளவர் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது .

நீண்ட காலம் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தொடர்ச்சியான வெற்றிகளுக்கும், இங்கிலாந்து கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கும் காரணமாக இருந்த அண்டி பிளவர் பல்வேறு நாடுகளிலும் பிரான்ஷைஸ் கிரிக்கெட் போட்டிகளுடைய பயிற்சியாளராகவும் செயற்பட்டு உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிளவர் 63 டெஸ்ட் மற்றும் 213 ஒருநாள் போட்டிகளில் ஜிம்பாப்வேயை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.  ஐபிஎல், சிபிஎல், பிஎஸ்எல் மற்றும் The Hundred உட்பட உலகெங்கிலும் உள்ள பல்வேறு உரிமையாளர்கள் மற்றும் டி 20 லீக்குகளில் பயிற்சியாளராக இருந்த அனுபவம் ஆப்கானிஸ்தான் அணிக்கு கைகொடுக்கும் என நம்பப்படுகிறது.

 

Previous articleகிரன் பொல்லார்டின் நீண்டகால ஐபிஎல் சாதனையை முறியடித்த மனிஷ் பாண்டே …!
Next articleஅபுதாபி T10 லீக்கில் பங்கேற்க 8 இலங்கை வீரர்களுக்கு சந்தர்ப்பம்- விபரம் இணைப்பு.