உலகக் கிண்ணத்துக்கான இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகராக மஹேல -அரவிந்து கருத்து..!
இலங்கை கிரிக்கெட் அணியின் உலககிண்ண போட்டிகளுக்கான ஆலோசகர் பதவியில் மஹேலவைை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குறிப்பாக இந்திய கிரிக்கெட் அணிக்கு உலகக் கிண்ண போட்டிகளில் மகேந்திர சிங் தோனி ஆலோசகராக நியமிக்கப்பட்டதை போன்று, இலங்கை கிரிக்கெட் அணி உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு ஆலோசகர் ஒருவர் நியமிக்கப்படும் வாய்ப்புகள் தெரிகின்றன .
அப்படி ஆலோசகர் ஒருவர் இலங்கை கிரிக்கெட் அணியின் செயல்படுவதாக இருந்தால், அது நிச்சயமாக மஹேலவாக மட்டுமே இருக்க முடியும் என இலங்கை கிரிக்கெட் கமிட்டியின் தலைவர் அரவிந்த டி சில்வா கருத்து தெரிவித்திருக்கிறார்.
இலங்கையின் பிரபலமான ஆங்கில இதழான சண்டே டைம்ஸ்க்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார் .
அரவிந்தவின் வேண்டுகோளுக்கு இணங்கவே மஹேல ஜெயவர்தன இலங்கையின் இளையோர் அணியின் ஆலோசகராக, ஊதியமற்று சேவையாற்ற இணங்கினார் என்பதும் இங்கே சுட்டிக்காட்டத்தக்கது.
சில வேளைகளில் உலகக்கிண்ணப் போட்டிகளுக்கு இலங்கையின் ஆலோசகராக மஹேல ஜெயவர்தன நியமிக்கப்படுவாராக இருந்தால் இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு அது மிகப்பெரும் நம்பிக்கையை தோற்றுவித்துவிடும் எனலாம்.