உலகக் கிண்ணத்துக்கான ஓமான் அணி விவரம் அறிவிப்பு..!
அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள உலக டுவென்டி டுவென்டி தொடருக்கான ஓமான் கிரிக்கெட் அணியின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
ஓமான் அணி உலகக் கிண்ணத்துக்கு நேரடித் தகுதி பெறாத காரணத்தால் தகுதி சுற்று ஆட்டங்களில் விளையாடி அதன் பின்னரே சூப்பர் 12 எனப்படும் ஆட்டங்களுக்கு தகுதி பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆக மொத்தத்தில் Round 1 எனப்படும் முதல் சுற்று ஆட்டங்களில் ஓமான் அணி, பப்புவா நியூகினியா, பங்களாதேஷ் மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய அணிகளுடன் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தக் குழுவில் இருந்து வெற்றி பெறும் இரண்டு அணிகள் உலகக் கிண்ணத்துக்கான அடுத்தகட்ட சூப்பர் 12 ஆட்டங்களுக்கு தகுதி பெறும் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.