இந்தியாவின் 75வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய கிரிக்கெட் அணிக்கும் உலக பதினொருவர் அணிக்கும் இடையே கிரிக்கெட் போட்டியை நடத்த இந்திய அரசு BCCI க்கு ஒரு திட்டத்தை அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய அரசின் திட்டமிடலின் அடிப்படையில் சரியாக நடந்தால், ஆகஸ்ட் 22 அன்று குறித்த போட்டி விளையாடப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.