உலக கால்பந்தின் பேரதியசம் நெய்மர் 💜
பிரேசிலில் மலைவாழ் மக்கள் வாழ கூடிய மோகி தாசு குருசெசு என்ற கிராமத்தில் பிறந்தார் நெய்மர். மலையடிவாரத்தில் இருக்கும் அந்த கிராமத்தின் ஒரு பகுதியில் தான் பிரேசிலிய அரசு ஒட்டு மொத்த குப்பைகளையும் கொண்டு கொட்டி சுத்திகரிப்பு செய்யும் ஒரு இடமாக இருந்து வந்தது. பள்ளிகளோ கால்பந்து மைதானங்களோ இல்லாத ஓர் பகுதி அது, நம்மூரில் சிறுவர்கள் தெருக்களில் எப்படி கிரிக்கெட் விளையாடுவார்களோ அதே போல் பிரேசிலில் சிறுவர்கள் கால்பந்து விளையாடுவார்கள். அப்படிதான், கால்பந்து கற்றார் நெய்மர்..!!
சிறு வயதிலேயே தன்னுடைய வீட்டில் இரண்டு மெழுகுவர்த்திகளை நட்டு வைத்து அதற்கு இடையே பந்தை அடித்து சொந்தமாக பயிற்சி செய்த நெய்மர் தன்னுடையை திறமையை நன்கு வளர்த்து கொண்டு பிரேசிலில் உள்ள சிறு கிளப் ஒன்றில் இனைந்து விளையாடி வந்தார். இவரது ஆட்டத்தை ஓர் நாள் பார்த்த பிரேசிலிய முன்னாள் கால்பந்து கேப்டனும் தேர்வு குழு தலைவராகவும் இருந்த டுங்கா, நெய்மரை புகழ்பெற்ற பிரேசிலிய கிளப்பான சாண்டோஸ் கிளப்பில் சேர்த்து விட்டார். அதன் பின் பிரேசிலிய தேசிய அணிக்கு தேர்வு செய்யப்பட்டார்…
நெய்மர் களத்தில் இருக்கிறார், அவர் காலுக்குள் பந்து சென்று விட்டது என்றால் நிச்சயம் அந்த பந்து கோல் எல்லையை நெருங்கி விடும் அந்த அளவுக்கு தன்னுடையை ஸ்பெஷல் ஸ்கில்ஸ் மூலம் தன்னை சுற்றி நான்கு பேர் நின்றால் கூட பந்தை லாவகமாக கடத்தி விடுவார். அதனாலேயே எதிரணி வீரர்கள் நெய்மரை குறிவைத்து தாக்குவார்கள் கால்பந்து பார்க்கும் எல்லோரும் இந்த காட்சிகளை பார்த்து இருப்போம் எதிரணியின் இதய பகுதியில் நின்று கொண்டு பந்தை லாவகமாக கடத்தி அவர்களின் தற்காப்பை உடைத்து கொண்டு முன்னேறுவதில் நெய்மருக்கு நிகர் நெய்மர் தான்..!!
ப்ரீ கிக் அடிப்பதிலும், பெனால்டி ஷீட் அடிப்பதிலும் நெய்மர் வல்லவர். பிரேசிலிய நிரந்தர கால்பந்து கடவுள் பிலே அடித்த கோல்களை நெய்மர் சமன் செய்து விட்டார், இப்போது பிலேவுக்கு அடுத்து பிரேசிலிய மக்களின் கடவுளாக பார்க்கப்படுவது நெய்மர் தான்.
விளையாட்டில் மெஸ்ஸி ரொனால்டோவுக்கு இனையான சம்பளத்தை வாங்கும் இவர் அந்த பணத்தில் எந்த வசதியும் இல்லாத தன்னுடையை கிராமத்தில் பள்ளிகள் கட்டி இருக்கிறார், கால்பந்து மைதானங்கள் வர காரணமாக இருந்து இருக்கிறார், பல நூறு குழந்தைகளின் கல்வி செலவை ஏற்று இருக்கிறார்.
நெய்மரால் இப்போது அந்த கிராமமே மாறி விட்டது. தங்கள் கிராமத்தில் குப்பைகளை கொட்ட கூடாது என்கிற நெய்மரின் கோரிக்கையை ஏற்று பிரேசிலிய அரசாங்கம் அங்கு குப்பைகளை கொட்டுவதை நிறுத்தி விட்டது, இவ்வளவு ஏன் ஒரு சிறு விமான ரன்வேயும் அரசு அங்கே அமைத்து இருக்கிறது இப்போது அந்த கிராமம் எல்லா வசதியும் நிறைந்து இருக்கிறது. தன்னை வளர்த்து விட்ட டுங்காவுக்கு வாழ் நாளுக்கான மொத்த செலவையும் நெய்மரே ஏற்று கொண்டிருக்கிறார். விளையாட்டும் அதில் கிடைக்கும் வருமானமும் ஒரு தனி நபரை சார்ந்தது தான், ஆனால் அதில் தான் மட்டும் சொகுசாக வாழாமல் தன்னுடையை கிராமத்துக்கும் உதவி செய்து ஆயிரக்கணக்கான குழந்தைகள் படிக்கவும் கால்பந்து விளையாடவும் காரணமாக இருக்கும் நெய்மர் என்றும் பிரேசிலிய மக்களின் மனதில் நிலைத்து நிற்பார்..!!
✍️Stefana Jency
#football
#Neimar