உலக கிரிக்கெட் அரங்கில் 2 வது வீரராக சாதனை மைல்கல்லை எட்டிய கோலி..!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி நேற்று தனது 100வது இருபது ஓவர் போட்டியில் விளையாடி புதிய சாதனை படைத்தார்.
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விராட் கோலி 35 ரன்கள் விளாசி இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 100வது டி20 போட்டியில் விளையாடும் 14வது வீரர் என்ற பெருமையை கோஹ்லி பெற்றுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் அரங்கில் டெஸ்ட், ஒருநாள், டுவென்டி-20 என 3 பிரிவுகளிலும் 100 போட்டிகளில் விளையாடிய இரண்டாவது வீரர் என்ற சாதனையை நேற்று விராட் கோலி பெற்றார்.
விராட் கோலி சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இதுவரை 102 டெஸ்ட் போட்டிகள், 262 ஒருநாள் போட்டிகள் மற்றும் 100 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
விராட் கோலிக்கு முன், நியூசிலாந்து வீரர் ரோஸ் டெய்லர் மட்டுமே டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய மூன்று பிரிவுகளிலும் 100 போட்டிகளில் விளையாடியுள்ளார். ரோஸ் டெய்லர் 112 டெஸ்ட், 236 ஒருநாள் மற்றும் 102 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி 12344 ஒருநாள் ரன்களும், 8074 டெஸ்ட் ரன்களும், 3343 டி20 ரன்களும் எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.