இங்கிலாந்து அணியின் அதிரடி ஆரம்ப வீரர் பேர்ஸ்டோவ் ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பையில் இருந்து உபாதை காரணமாக விலக்கப்பட்டுள்ளார்.
வெள்ளியன்று லீட்ஸில் கோல்ஃப் விளையாடிக் கொண்டிருந்த போது ஒரு விபத்தொன்றில் பேர்ஸ்டோவுக்கு கீழ் மூட்டு காயம் ஏற்பட்டதன் காரணமாக உலக கோப்பையை தவறவிட்டுள்ளார்.
அடுத்த வியாழன் அன்று ஓவலில் தொடங்கும் தென் ஆபிரிக்காவுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான டெஸ்ட் அணியில் பேர்ஸ்டோவுக்கு பதிலாக இளம் வீரர் பென் டக்கெட் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே இன்று அறிவிக்கப்பட்ட இங்கிலாந்தின் உலக கோப்பை அணியில் ஜேசன் ரோய் அணியில் இடம்பெறவில்லை ,உபாதை காரணமாக ஜோஃப்ரா ஆர்ச்சரும் சேர்த்துக் கொள்ளப்படவில்லை.
இந்த நிலையில் இன்னும் ஒரு முக்கியமான வீரரான பேர்ஸ்டோவும் உபாதைக்குள்ளானமை இங்கிலாந்து அணிக்கு பலத்த தலையிடியை தோற்றுவித்துள்ளது.
இங்கிலாந்தின் ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை அணியில் பேர்ஸ்டோவுக்கு பதிலாக யார் இடம் பெறுவார்கள் என்பது குறித்த அறிவிப்பு இதுவரை வெளிவரவில்லை, இங்கிலாந்து T20 உலக்கோப்பை அணி இன்று மாலையே அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.