உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி தொடர்பில் நியூசிலாந்தின் வாக்னர் கருத்து…!

நியூஸிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான டெஸ்ட் உலகக்கிண்ணம் என்று அழைக்கப்படும் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி வருகின்ற ஜூன் மாதம் 18ஆம் திகதி சௌத்தம்டன் மைதானத்தில் இடம் பெறவிருக்கிறது .

இதற்கு முன்னர் நியூசிலாந்து அணி ,இங்கிலாந்து அணியுடன்ட டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடவுள்ளது .

இந்த நிலையில் நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் வாக்னர் ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார்.

 

ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டி தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னதாக இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடர் இடம்பெறுகின்றமை வரவேற்கத்தக்கது, இதனை நாங்கள் பயிற்சி போட்டியாக விளையாட மாட்டோம் என்று அவர் சொல்லியிருக்கிறார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான பயிற்சிப் போட்டியாக இதனை கருதாமல் இங்கிலாந்துக்கு நெருக்கடி கொடுத்து போட்டிகளை வெற்றி கொள்வதற்கு ஆவலாக இருப்போம் என்று வாக்னர் குறிப்பிட்டுள்ளார்.