ஒரு சிறந்த மனிதாபிமான செயல்பாட்டில் நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுத்தி ஈடுபட்டுள்ளதை அறியமுடிகின்றது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிபோட்டியில் பயன்படுத்தி, முழு அணியும் கையெழுத்திட்ட ஜெர்சியை ஏலத்துக்குவிட்டு புற்றுநோய் நிதிதிரட்டும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார் சவுத்தி.
கொடிய புற்றுநோயை எதிர்த்துப் போராடும் எட்டு வயது ஹோலி பீட்டிக்கு நிதி திரட்டும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார்,ஹோலிக்கு 2018 ஆம் ஆண்டில் நியூரோபிளாஸ்டோமா என்ற புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது, மேலும் அவரது சிகிச்சைக்கான நிதியை திரட்ட அவரது குடும்பத்தினர் சிரமப்பட்டு வருகின்றனர்.
சில வருடங்களுக்கு முன்பு கிரிக்கெட் சமூகத்தின் மூலம் ஹோலியின் கதையைப் பற்றி முதலில் கற்றுக்கொண்டேன், பீட்டி குடும்பத்தின் விடாமுயற்சி, வலிமை மற்றும் நேர்மறையான அணுகுமுறை ஆகியவற்றால் நான் ஈர்க்கப்ப்பட்டுள்ளேன் என்று ஜேர்சி ஏலம் குறித்து சவுத்தி கூறினார்.
“ஹோலிக்கு கூடுதல் சிகிச்சை தேவை என்று கேள்விப்பட்டதிலிருந்து, நான் ஏதோவொரு வழியில் அவருக்கான நிதிப்பங்களிப்பை வழங்க வேண்டும் என்று எண்ணினேன் எனவும் தெரிவித்தார்.
WTC இறுதிப் போட்டியில் நியூசிலாந்தின் வெற்றியில் சவுதி ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தார், இரண்டாவது இன்னிங்ஸில் கைப்பற்றிய நான்கு விக்கெட்டுக்கள் உட்பட ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஹோலியின் மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஏலம் போதுமான நிதி திரட்டும் என்று நம்புவதாகவும் சவுத்தி கூறினார்.
அவரது சிகிச்சைக்கு 300,000 லட்சம் அமெரிக்க டொலர்கள் செலவாகும் என்று அறியவருகின்றது.
இந்தநிலையில் சவுத்தியின் இந்த மனிதாபிமான பணி உண்மையில் பாராட்டத்தக்கதுதான். வாழ்த்துக்கள் சவுத்தி.