?வாழ்த்துக்கள் ?
டேனிஷ் ஓபன் நீச்சல் போட்டி; வெள்ளி பதக்கம் வென்ற நடிகர் மாதவனின் மகன்..
டென்மார்க் நாட்டின் கோபன்ஹேகன் நகரில் டேனிஷ் ஓபன் நீச்சல் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. இதில் 1,500 மீட்டர் பிரீஸ்டைல் பிரிவில் நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் மாதவன் (வயது 16) கலந்து கொண்டார். அவர் பந்தய தொலைவை, 15 நிமிடம் 57 வினாடிகளில் கடந்து 2வது இடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.
இதேபோன்று மற்றொரு இந்திய வீரரான சஜன் பிரகாஷ் 200 மீட்டர் பட்டர்பிளை பிரிவில் 1 நிமிடம் 59 வினாடிகளில் பந்தய தொலைவை எட்டி தங்க பதக்கம் வென்றுள்ளார்.
இந்தியாவுக்கு இரண்டு பதக்கங்களை பெற்று சாதனை படைத்த இருவரையும் பற்றி நடிகர் மாதவன் தனது டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார். இந்திய நீச்சல் கூட்டமைப்பு மற்றும் துபாயில் உள்ள அகுவா தேசிய விளையாட்டு அகாடமி மற்றும் பயிற்சியாளர் பிரதீப் ஆகியோருக்கும் நடிகர் மாதவன் தனது நன்றியை தெரிவித்து உள்ளார்.
இதனை தொடர்ந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. நடிகர் அபிஷேக் பச்சனும் டுவிட்டரில் தனது வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார். கடந்த ஆண்டு மார்ச்சில் லத்வியா ஓபனில் வெண்கல பதக்கம் வென்ற பின்னர் இளநிலை தேசிய நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டிகளில் கடந்த ஆண்டு வேதாந்த் 7 பதக்கங்களை (4 வெள்ளி மற்றும் 3 வெண்கலம்) வென்றுள்ளார்.
???GOLd https://t.co/tIoMesoylV
— Ranganathan Madhavan (@ActorMadhavan) April 17, 2022
❤️❤️???? https://t.co/4HMP4wNbik
— Ranganathan Madhavan (@ActorMadhavan) April 17, 2022
Thank you so so much . We are so thrilled . Thank you for the wishes and love bro https://t.co/qX8NB00zIl
— Ranganathan Madhavan (@ActorMadhavan) April 17, 2022
❤️❤️?????? https://t.co/jo22sxLwE5 pic.twitter.com/Zf1uCOowge
— Ranganathan Madhavan (@ActorMadhavan) April 17, 2022