“எங்கள் நாட்டில் திறமையானவர்கள் அதிகம் உள்ளனர், அதை விரைவில் உலகிற்கு காட்ட முடியும்” – பானுக ராஜபக்ஷ

“எங்கள் நாட்டில் திறமையானவர்கள் அதிகம் உள்ளனர், அதை விரைவில் உலகிற்கு காட்ட முடியும்” – இந்திய ஊடகங்களுக்கு பானுகா ராஜபக்ஷ கூறுகிறார்!

மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது.

மேலும், 4 போட்டிகள் வாய்பில்லாமல் பின்னர் மீண்டும் வாய்ப்பைப் பெற்ற பானுக ராஜபக்ச வெற்றிகரமாக மீண்டு வந்தார். தவானுடன் இணைந்து 2 வது விக்கட்டில் சத இணைப்பாட்டம் புரிந்தார்.

போட்டியின் பின்னர், இலங்கையின் துடுப்பாட்ட வீரர் பானுகா ராஜபக்ச, இந்த ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக்கில் அதிக எண்ணிக்கையிலான இலங்கை வீரர்கள் இணைந்துள்ளமை குறித்து ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்தார்.

கடந்த இருபதுக்கு 20 உலகக் கோப்பையில் இலங்கை எப்படி மீண்டது என்பதை நினைவுபடுத்த பானுக மறக்கவில்லை.

அவர் தொடர்ந்து பேசுகையில், “முதலில், எங்களுக்கு கிடைத்த வாய்ப்பிற்காக நான் கடவுளுக்கு நன்றி கூறுகிறேன். கடந்த இரண்டு வருடங்களாக இலங்கை கிரிக்கெட் அணிக்கு சிறந்த ஆண்டாக இல்லாவிட்டாலும், கடந்த உலகக் கிண்ணப் போட்டிகளின் ஆட்டத்தால் ஐபிஎல் அணிகளின் கண்கள் இலங்கை வீரர்கள் மீதே குவிந்துள்ளன.

நமக்கெல்லாம் இங்கு (IPL) இருப்பதும், கிரிக்கெட் உலகின் சிறந்த வீரர்களுடன் விளையாடும் வாய்ப்பு கிடைத்திருப்பதும் ஒரு சிறந்த வாய்ப்பு.

எனவே, இலங்கை வீரர்கள் தேர்வு குறித்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். கடந்த சில ஆண்டுகளாக நமது கிரிக்கெட் நல்ல இடத்தில் இல்லாவிட்டாலும், கடந்த உலகக் கோப்பையில் நாங்கள் விளையாடிய விதம் இந்த முறை இந்தியன் பிரீமியர் லீக்கில் எங்களுக்கு வாய்ப்பளித்தது என்றும் தெரிவித்தார்.