ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் குல்தீப் சென் தொடர்பாக பலவித சகய்திகள் வெளிவந்த வண்ணமுள்ளன.
25 வயதான வேகப்பந்து வீச்சாளர் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிராக தனது சிறப்பு பந்துவீச்சினால் மிகவும் கவர்ந்தார். கடைசி ஓவரில் லக்னோவின் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், மார்கஸ் ஸ்டோனிஸ் பேட்டிங் செய்து கொண்டிருந்தார். குல்தீப் சென் இங்கு பதற்றமடையாமல் அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார்.
இத்தனைக்கும் இந்த குல்தீப் சென் யார் என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது.
20 லட்சத்துக்கு குல்தீப் சென் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார். ஐந்து உடன்பிறந்தவர்களில் மூன்றாவது மூத்தவரான குல்தீப் சென், மத்தியப் பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தில் உள்ள ஹரிஹர்பூரைச் சேர்ந்தவர்.
குல்தீப் ஒரு சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர் மற்றும் அவரது தந்தை ராம்பால் சென் குடும்பத்தை ஆதரிக்க ஒரு சிறிய சலூனை நடத்தி வருகிறார்.
குல்தீப்பின் தந்தை தனது மகன் ஐபிஎல் போட்டியில் அறிமுகமானதை காண சலூனில் தங்கியிருந்ததாக சில உள்ளூர் செய்தித்தாள்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குல்தீப் சென் தனது எட்டு வயதில் கிரிக்கெட் விளையாடத் தொடங்கினார். கிரிக்கெட் மீதான அவரது ஆர்வத்தைப் பார்த்து, அவர் விளையாடிய அகாடமி அவரது கட்டணத்தை தள்ளுபடி செய்தது.
குல்தீப் சென் 2018 ரஞ்சி டிராபி போட்டியில் தனது முதல் தர (First Class ) அறிமுகமானார். அந்த சீசனில் குல்தீப் தனது பந்துவீச்சில் மிகவும் கவர்ந்து 25 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அந்த நேரத்தில், குல்தீப் சென் பஞ்சாப் அணிக்கு எதிராக ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி மிகநல்ல பெயர் சம்பாதித்திருந்தார்.
குல்தீப் சென் ஒரு சிறந்த அவுட்ஸ்விங்கராக பந்து வீசுவதாக அறியப்பட்டவர். அவர் பேட்டிங்கிலும் திறம்பட செயல்படக்கூடியவர் மற்றும் சிக்ஸர்களை அடிக்கும் ஆற்றல் படைத்தவர். குல்தீப் சென் வழக்கமாக மணிக்கு 135-140 கிமீ வேகத்தில் பந்து வீசுகிறார். இன்-ஸ்விங் மற்றும் அவுட்-ஸ்விங்கர் மற்றும் ஆபத்தான இன்-கட்டர் அவரது முக்கிய ஆயுதங்களில் ஒன்றாகும்.
குல்தீப் சென் இதுவரை முதல் தர போட்டிகள் 16 போட்டிகளில் 44 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதே சமயம் லிஸ்ட் A கிரிக்கெட்டில் குல்தீப் பெயரில் 4 விக்கெட்டுகள் பதிவாகியுள்ளன. ஆனால், டி20 கிரிக்கெட்டில் குல்தீப் இதுவரை 19 டி20 போட்டிகளில் விளையாடி 13 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வருகின்றது மொகமட் சிராஜின் ஒரு டாக்சி ட்ரைவர் என்பது குறிப்பிடத்தக்கது, டாக்ஸி ஓட்டுனர் ஆக இருந்து மகனை கிரிக்கெட்டர் ஆக்கியதை போன்று இந்த குல்தீப் சென்னின் தந்தை ஒரு சலூன் கடை வைத்து குடும்பம் நடத்தி வருபவர் என்பதும் மிக முக்கியமான ஒரு விஷயம் எனலாம்.
எங்கிருந்து வந்தோம் என்பதல்ல -எப்படியாகினோம் என்பதுதான் முக்கியமானது, குல்தீப் சென் நம் எல்லோருக்குமான இன்ஸ்பிரேசன்.