என்னதான் செஞ்சுரி அடிச்சாலும் விராட் கோலியின் இடத்தை கில் நிரப்புவதற்கு லேட் ஆகும் – காரணத்தை கூறிய கங்குலி
இந்த இங்கிலாந்து தொடருக்கு முன்னதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி சர்வதேச டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்ததால் அவரது இடத்தில் எந்த வீரர் விளையாடப்போகிறார்? என்கிற எதிர்பார்ப்பு இருந்த வேளையில் அவரது இடத்தில் தான் விளையாடப்போவதாக புதிய கேப்டன் சுப்மன் கில் அறிவித்திருந்தார்.
இந்த போட்டியில் நான்காவது இடத்தில் களமிறங்கிய அவர் கேப்டனாக தனது முதல் போட்டியிலேயே 227 பந்துகளை சந்தித்து 19 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் என 147 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார். அதனால் அவரை அடுத்த கிங் என்றெல்லாம் ரசிகர்கள் கொண்டாட துவங்கி விட்டனர்.
இந்நிலையில் சுப்மன் கில் அடித்த இந்த சதம் சிறப்பான ஒன்றுதான் என்றாலும் விராட் கோலியின் இடத்தை நிரப்ப நேரமாகும் என சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : விராட் கோலி ஒரு கிளாஸ் பிளேயர். அவரை போன்ற ஒரு வீரரின் இடத்தை நிரப்புவது என்பது சாதாரண விடயம் கிடையாது. அதற்காக இன்னும் அதிக நேரம் தேவைப்படும்.
தற்போது சுப்மன் கில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதத்தை அடித்து இருந்தாலும் அவரது உயரத்தை எட்ட இது போன்ற பல ஆட்டங்கள் தேவை. தற்போது இந்தியாவில் கிரிக்கெட்டின் தரம் உயர்ந்திருப்பதால் நிறைய வீரர்கள் நல்ல திறனுடன் இருக்கிறார்கள். சுப்மன் கில் எதிர்காலத்தில் விராட் கோலி இடத்தை நிரப்பினாலும் நான் ஆச்சரியப்பட மாட்டேன். ஏனெனில் அவரும் ஒரு திறமையான வீரர் தான். இந்த போட்டியில் சுப்மன் கில்லின் கால் நகர்வுகள் அருமையாக இருந்தது.
இங்கிலாந்தில் உள்ள சூழல்களை கணித்து கால் நகர்வுகளை சரியாக பயன்படுத்துவதன் மூலம் நல்ல இன்னிங்சை விளையாட முடியும். அந்த வகையில் இந்த போட்டியில் அவர் மிகச் சிறப்பாக விளையாடி சதம் அடிப்பதை பார்த்ததில் மகிழ்ச்சி. இன்னும் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் நிறைய முன்னேற்றம் காண வேண்டும் என சவுரவ் கங்குலி கூறியது குறிப்பிடத்தக்கது.
#viratkohli #shubmangill #SouravGanguly #TeamIndia #testcricket #testmatch #INDvsENG