“என்னாது பேட் மட்டும் தனியா நிக்குது”- ரூட் செய்த மேஜிக்.. (வீடியோ)!
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது.
இதில் லார்ட்ஸில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் ரூட்டின் பேட்டிங்கை விட, அவரின் பேட் தான் அதிக கவனம் பெற்றுள்ளது. 2வது இன்னிங்ஸின் போது நான் ஸ்ட்ரைக்கரில் நின்றுக்கொண்டிருந்த ஜோ ரூட் , தனது பேட்டை கையில் இருந்து அப்படியே விட்டுவிட்டார்.
ஆனால் பேட் கீழே விழாமல் தானாக நேராக நின்றுக்கொண்டிருந்தது. பேட்டில் எந்தவித அசைவுகளும் இல்லை. இங்கிலாந்து அணி வீரர் ஜோ ரூட்டின் பேட் மட்டும் களத்தில் தனியாக நின்றுக்கொண்டிருந்த வீடியோ ரசிகர்களை இப்போது ஆச்சரியப்பட வைத்துள்ளது.
வழக்கமாக பேட்ஸ்மேன்கள் தங்களது கைகளில் பேட்டை பிடித்துக்கொண்டிருப்பார்கள். ஜோ ரூட் மட்டும், தனது பேட்டை அதுவாக நிற்பது போன்று வைத்துவிட்டு, ரன் ஓடும் போது மட்டும் எடுத்துக்கொண்டார். இதனை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியத்தில் உறைந்தனர். அவர் அப்படி என்ன மேஜிக் செய்கிறார் என குழம்பினர். அவரின் பேட்டை மட்டும் அடிப்பகுதியில் தட்டையாக செய்துவிட்டனரா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
விடியோவைப் பாருங்கள்..!
I knew @root66 was talented but not as magic as this……. What is this sorcery? @SkyCricket #ENGvNZ ? pic.twitter.com/yXdhlb1VcF
— Ben Joseph (@Ben_Howitt) June 5, 2022
YouTube காணொளிகளுக்கு ?
ICC விருது – 2 இலங்கையர் பரிந்துரை ..!
ரூட் படைத்த சாதனைகள்
நடால் சாம்பியன் மகுடம் சூடினார்