எல்லாம் முடிந்தது- மெஸ்ஸியின் புதிய சகாப்தம் ஆரம்பம், 30 இலக்கத்துடன் PSG யில்…!
பிரபலமான கால்பந்தாட்ட வீரரான லயோனல் மெஸ்ஸி PSG கழகத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.
மெஸ்ஸியின் அதிஷ்ட இலக்கமான 10 ம் இலக்கத்தை அணிந்து அவரால் போட்டிகளில் விளையாட முடியாத நிலை உருவாகியுள்ளது ,ஏற்கனவே அந்த கழகத்தில் இருக்கும் பிரேசில் நாட்டின் நெய்மர் 10ஆம் இலக்க Jersey அணிந்து விளையாட்டும் காரணத்தால் மெஸ்ஸி ஆரம்ப காலத்தில் பயன்படுத்திய 30 ஆம் இலக்க சீருடை அணிந்து PSG அணிக்காக விளையாடுவார் என அறியத்தரப்பட்டுள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு இவர் PSGகழகத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
34 வயதான மெஸ்ஸி கடந்த 17 சீசன்களாக பார்சிலோனா கழகத்திற்காக விளையாடி வந்தவர் என்பதும் சுட்டிக் காட்டக்கூடியது.
மெஸ்ஸியின் புதிய சகாப்தம் ஆரம்பித்து இருக்கிறது, மெஸ்ஸியின் கால்பந்து பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.